tamilnadu

img

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் மாநில மாநாடு

புதுக்கோட்டை, ஆக.19- தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் 6-ஆவது மாநில மாநாடு புதுக்கோ ட்டையில் வெள்ளிக்கிழமையன்று பேரணி-பொதுக்கூட்டத்துடன் எழுச்சியுடன் தொடங்கியது. தமிழ்நாடு அங்கன்வாடி ஊழி யர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் 6-ஆவது மாநில மாநாடு புதுக்கோட்டையில் ஆக.19, 20 தேதி களில் நடைபெறுகிறது. வெள்ளிக் கிழமையன்று புதுக்கோட்டை பால்பண்ணையில் இருந்து தொடங்கிய பேரணியை சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஏ.ஆர்.சிந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிலம்பாட்டம், தப்பாட்டத்துடன் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற பேரணி திலகர்திடல், மேலராஜவீதி, தெற்கு 4-ஆம் வீதி,  அண்ணாசிலை வழியாக பொதுக் கூட்டம் நடைபெறும் சின்னப்பா பூங்காவை வந்தடைந்தது. பேரணி சென்ற வழிநெடுகிலும், சிஐடியு, அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம், தையல் தொழிலாளர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம், இந்திய மாண வர் சங்கங்களின் சார்பில் ஆங்காங்கே நின்று சிறப்பான வர வேற்பும், வாழ்த்து முழக்கமும் அளிக்கப்பட்டது.

பொதுக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ரத்னமாலா தலைமை வகித்தார். சிஐடியு மாவட் டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் வரவேற் றார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.ஆர். சிந்து, கந்தர்வகோட்டை சட்டப்பேர வை உறுப்பினர் எம்.சின்னதுரை, சிஐடியு மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாநில செயலாளர் கே.சி.கோபிகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கி மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி, பேசினார். மாநில பொருளாளர் எஸ்.தேவமணி நன்றி கூறினார். புதுகை பூபாளம் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து சனிக்கிழமை (20.08.2022) புதுக்கோட்டை லேணா திருமண மண்டபத்தில் தோழர் ஸ்டெல்லா நினைவரங்கத்தில் பிரதி நிதிகள் மாநாடு நடைபெறுகிறது.

;