tamilnadu

நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர் தேர்தல்களை நேரடித் தேர்தல்களாக நடத்திடுக!

சென்னை, நவ. 26 - நகர்ப்புற உள்ளாட்சி தலைவர் தேர்தல்களை நேரடித் தேர்தல்களாக நடத்திட வேண்டுமென தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநி லக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.  கட்சியின் மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நவம்பர் 25 அன்று நடை பெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு:

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டுவிட்டன. ஆனால் இதுவரை நகர்ப்புற உள்ளாட்சிகளான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி களுக்கான தேர்தல்கள் நடத்தப்படாமல் உள்ளன. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க காலக்கெடு நிர்ணயித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதையொட்டி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கான தயாரிப்புகளில் மாநில தேர்தல் ஆணை யம் ஈடுபட்டுள்ளது. 

தமிழகத்தில் நீண்ட காலமாக நகர்ப்புற உள்ளாட்சி தலைவர்களை மக்கள்  நேரடியாக வாக்களித்து தேர்வு செய்கின்ற  நேரடி தேர்தல்களாக நடைபெற்று வந்தது. கடந்த அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தலைவர்களுக்கான தேர்தலை நேரடி தேர்தலாக நடத்தாமல் கவுன்சிலர்கள் வாக்களித்து தேர்வு செய்கின்ற மறைமுக தேர்தலாக நடத்தும்  வகையில் அரசு சட்டத் திருத்தம் கொண்டு  வந்தது. இதில் ஜனநாயக முறைகேடு களும், ஊழல்களும் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளதால் மீண்டும் நேரடித் தேர்தல்களாகவே தலைவர் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளும் அரசை வலியுறுத்தி வந்தன. அப்போது எதிர்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகமும் நேரடி தேர்த லாகவே நகர்ப்புற உள்ளாட்சி தலைவர் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்தி வந்தது.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தலைவர்களுக்கான தேர்தல்கள் நடத்த நடவடிக்கைகள் எடுத்து வரும்போது தலைவர் தேர்தலை நேரடி தேர்தல்களாக நடத்தும் வகை யில் சட்டத்திருத்தம் கொண்டு வரப் படாமல் மறைமுக தேர்தல்களாக நடத்த வுள்ளதாக தெரிய வருகிறது. இந்த மறைமுக தேர்தல் என்பது மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதற்கும், ஜனநாயக விரோதமான முறையில் ஆள்கடத்தல் மற்றும் பல லட்சம் ரூபாய்க்கான பேரங்கள் நடப்பதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் இது மக்களினுடைய உண்மையான தேர்வாக அமையாது. ஜனநாயக மீறல்கள் நடப்பதற்கு வழிவகுக்கும்.

எனவே, ஏற்கனவே திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சி தலைவர் தேர்தலை நேரடி தேர்தலாக நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி வந்துள்ளதால், மக்களும் ஜனநாயக முறையில் முறைகேடுகளற்ற வகை யில் தலைவர் தேர்தல் நடைபெற வேண்டு மென்று விரும்புவதால் தமிழக அரசு தேவையான சட்டத்திருத்தத்தை அவசர  சட்டமாக பிறப்பித்து நகர்ப்புற உள்ளாட்சி  தலைவர் தேர்தல்களை நேரடி தேர்தலாக நடத்திட முன்வர வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில க்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

;