tamilnadu

img

முகக்கவசம், சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்

சென்னை, செப். 26- முகக்கவசம், சமூக இடை வெளியை தொடர்ந்து கடை பிடிக்க வேண்டும் என உலக சுகா தார நிறுவன தலைமை விஞ்ஞானி  சௌமியா சாமிநாதன் கூறினார். இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு  சற்று ஏற்றம், இறக்கங்களை சந் தித்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 85,60,81,527 பேருக்கு  (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 68,42,786 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் சென்னை யில்  உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில் முகக்கவசம், சமூக  இடைவெளியை தொடர்ந்து கடை பிடிக்க வேண்டும். அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தும் வரை கட்டுப்பாடுகளை கடை பிடிக்கவும் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு தான் என்றார்.

;