tamilnadu

“ஒமிக்ரான்” பெயர் வந்தது எப்படி?

உலக நாடுகளை சிறிய இடைவெளி விட்டு 2 ஆண்டு களாக தொடர்ந்து  மிரட்டி வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொரோனா வைரஸின் உருமாறிய பிறழ்வுகளுக்கு கிரேக்க மொழி எழுத்துகளின் பெயர்கள் உலக சுகாதார நிறுவனத்தால் வைக்கப்படுகின்றன. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என தற்போது வரை 12 எழுத்துகளின் பெயர்களில் உருமாறிய கொரோனா வைரஸுக்கு பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. கடைசியாக அமெரிக்காவில் உருமாறிய வைரஸுக்கு “ஆரு” என்ற 12-வது கிரேக்க வார்த்தையில் வைக்கப்பட்டது. அதன் பின்பு தற்போது தென் ஆப்பிரிக்காவில் உருமாறியுள்ள புதிய வைரஸுக்கு ஒமிக்ரான் (OMICRON) என்ற 15-வது கிரேக்க வார்த்தையில் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

;