tamilnadu

img

எஸ்ஐஆர் அப்பட்டமான அரசியலமைப்புச் சட்ட மீறல்!

எஸ்ஐஆர் அப்பட்டமான  அரசியலமைப்புச் சட்ட மீறல்! உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சிபிஎம் கடும் எதிர்ப்பு

புதுதில்லி, நவ. 10 -  தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்கா ளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த உத்தரவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  உச்சநீதிமன்றத்தில் தாக்கல்  செய்துள்ள ரிட் மனுவில் கடு மையாகக் குற்றம்சாட்டியுள்ளது.  இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அனுமதி அளித்துள்ளது. அதன்படி செவ்வாயன்று (நவ. 11) சிபிஎம் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சை உத்தரவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், இந்திய தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 27 அன்று பிறப்பித்த உத்தரவு தன்னிச்சையானது, சட்டவிரோதமானது, அரசிய லமைப்புச் சட்டத்திற்கு நேரடியாக எதிரானது என்று கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலி யுறுத்தப்பட்டு உள்ளது.

மனித சக்திக்கு  அப்பாற்பட்ட இலக்கு

வாக்காளர் பட்டியலின் தூய்மை மற்றும் உள்ளடக்கத்தை உறுதி செய்யும் நோக்கத்தை எதிர்க்கவில்லை என்றாலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு தீவிர திருத்த செயல்முறை வெளிப்படையாக நடைமுறைக்கு சாத்தியமற்றது, என்றும்; இது  மனிதர்களால் இயலாத பணிச் சுமையை திணிப்பதாகவும், பிரதிநிதித்துவச் சட்டம் 1950 மற்றும் வாக்காளர் பதிவு விதிகள் 1960க்கு முற்றிலும் முரணானது என்றும் கூறப்பட்டுள்ளது.

6 கோடியே 18 லட்சம் பேரை  சரிபார்க்க வெறும் 31 நாட்கள்

தேர்தல் ஆணையத்தின் அறி விப்புப்படி, நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை தமிழ்நாட்டின் முழு வாக்கா ளர்களான 6 கோடியே 18 லட்சத் திற்கும் அதிகமான வாக்காளர் களை உள்ளடக்கி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச் சாவடி நிலைய அலுவல ருக்கும் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 500 வீடுகளுக்கு நேரில் சென்று படிவங்களை வழங்குதல், நிரப்பு தல் மற்றும் சரிபார்த்தல் போன்ற பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது மனிதர்களால் முற்றிலும் சாத்தியமற்ற இலக்கு” என்று சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

வெறும் 102 நாட்கள் நியாயத்திற்கு முரணானது

2025 அக்டோபர் 28 முதல்2026 பிப்ரவரி 7 வரையிலான ஒட்டுமொத்த சிறப்பு தீவிர திருத்த அட்டவணையானது, கணக் கெடுப்பு, சரிபார்ப்பு, வரைவு பட்டியல் வெளியீடு,  ஆய்வு, ஆட்சேபணைகள் மற்றும் இறுதி வெளி யீடு உள்ளிட்ட அனைத்து முக்கியமான நிலை களுக்கும் வெறும் 102 நாட்களை மட்டுமே அனு மதிக்கிறது.  இத்தகைய அதிக அளவில் சுருக்கப் பட்ட கால அட்டவணை தீவிர திருத்தத்தின் அடிப்படை நோக்கத்தையே தோல்வியுறச் செய்வ தாகவும், அரசியலமைப்புச் சட்டம் 14ஆவது பிரிவு  மற்றும் 324ஆவது பிரிவு ஆகியவற்றின் உள்ளார்ந்த  நடைமுறை நீதி மற்றும் நியாயத்தன்மை கொள் கைகளை கடுமையாக மீறுகிறது.

சட்டப்பூர்வ அடிப்படை இல்லாத அதிகார துஷ்பிரயோகம்

சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எந்தவித சட்டப் பூர்வ அடிப்படையும் இல்லை என்றும், இது தேர்தல் ஆணையத்தின் வெளிப்படையான அதி கார துஷ்பிரயோகம் என்றும் சண்முகம் குற்றச் சாட்டை முன்வைத்துள்ளார்.  மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 28ஆவது பிரிவின் மூன்றாவது உப பிரிவின்படி, வாக்காளர்  பட்டியல்களை நிர்வகிக்கும் எந்தவொரு நடை முறையும் கட்டாயமாக அதிகாரப்பூர்வ வர்த்தமானி யில் அறிவிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் வைக்கப் பட வேண்டும் என்பது அடிப்படை நடைமுறை. ஆனால் இந்த முக்கியமான வழக்கில் அத்தகைய  அரசியலமைப்பு நடைமுறை முற்றிலும் பின்பற்றப் படவில்லை.

பெரிய அளவில் வாக்குரிமை பறிக்கப்படும் ஆபத்து

சிறப்பு தீவிர திருத்தம் தற்போதைய வடிவில்  நடைமுறைப்படுத்தப்பட்டால்,  மிகப்பெரிய அள விலும் நியாயமற்ற முறையிலும் உண்மையான வாக்காளர்களது வாக்குரிமை பறிக்கப்படும் கடுமையான ஆபத்து உள்ளது. குறிப்பாக விளிம்பு நிலை மக்கள், புலம்பெயர்ந்து வேலை தேடிச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் போதுமான ஆவணங்கள் இல்லாத ஏழை மக்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்.

மறைமுகமான குடியுரிமைப்  பதிவேடு துவக்கம்  

குடியுரிமை சரிபார்ப்பை மேற்கொள்ளவும், சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவர்களை குடியுரி மைச் சட்டம்- 1955இன் கீழ் தகவல் அளிக்கவும் பரிந்துரைக்கவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் தேர்தல் ஆணையம் தனது அரசியலமைப்பு வரம்புகளை தெளிவாக மீறி யுள்ளது. இத்தகைய உத்தரவுகள் நடைமுறை யில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையை  மறைமுகமாக துவக்குவதற்கு சமம் என்றும், இது  தேர்தல் ஆணையத்தின் அதிகார எல்லைக்கு முற்றிலும் அப்பாற்பட்ட செயல்பாடு என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கூட்டாட்சி கொள்கையில்  நேரடி அத்துமீறல்

மாநில அரசுடன் எந்தவித முன்கூட்டிய கலந்தா லோசனையும் இல்லாமல், ஒருங்கிணைப்பும் இல்லாமல், தமிழ்நாட்டின் மீது இந்த விரிவான மற்றும் சிக்கலான சரிபார்ப்பு செயல்முறையை முற்றிலும் ஒருதலைப்பட்சமாக திணிப்பது அரசிய லமைப்பின் அடிப்படைக் கொள்கையான கூட்டு றவு கூட்டாட்சியை நேரடியாக மீறுவதாக மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாகக் கருதுகிறது. இவ்வாறு பெ. சண்முகம் மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்  செயலாளர் பெ. சண்முகம் சார்பில் உச்ச நீதி மன்ற வழக்கறிஞர் பிரசன்னா, திருமூர்த்தி ஆகி யோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.  

திமுக, மதிமுக, காங்கிரஸ்  கட்சிகளும் மனு தாக்கல்

தமிழ்நாட்டின் தற்போதைய ஆளும் கட்சி யான திமுகவும் தனியாக உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. அத்துடன், மதிமுக பொதுச்செய லாளர் வைகோ, காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, புதுச்சேரி திமுக சார்பில்  ஆர். சிவா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் உச்ச நீதி மன்றத்தில் செவ்வாயன்று விசாரணைக்கு வரு கின்றன.