tamilnadu

img

திட்டமிட்டபடி பிப்.19 இல் கோட்டை முற்றுகை.... அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ஆ.செல்வம் திட்டவட்டம்...

மதுரை:
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கத்தினர் பிப்.19 ஆம்அன்று சென்னை கோட்டையில் பெரும்திரள் முறையீடு-முற்றுகை நடத்த உள்ளனர். போராட்ட தேதி அறிவித்து பத்து நாட்கள் ஆகிவிட்டது. போராட்டத்திற்கு இன்னும் ஐந்து தினங்களே உள்ளன. தமிழக முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென அரசு ஊழியர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

கோட்டை முற்றுகை தொடர்பாக சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆ.செல்வம் தலைமையில் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம்மதுரையில் ஞாயிறன்று நடை பெற்றது. இதில் ஜாக்டோ-ஜியோ நடத்திய 72 மணி நேர போராட்டத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது. தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பிப்.19 நடை பெறவுள்ள போராட்டத்தில் மதுரையிலிருந்து ரயில், பேருந்து உள்ளிட்டபல்வேறு வாகனங்கள் மூலம் ஆயிரம் பேர் சென்னைக்குப் பயணமாவது; தமிழகம் முழுவதும் இருந்து பங்கேற்போரோடு இணைந்து கோரிக்கைகளை வலியுறுத்துவது என நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர். 

இந்தக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் ஜெ.மூர்த்தி, மாவட்டச் செயலாளர்க.நீதிராஜா, பொருளாளர் ராம்தாஸ், ஜெ.மகேந்திரன், சந்திரபிரபு, ப.மனோ கரன், முத்து முஹமது சைய்யது ஆகியோரும் கலந்துகொண்டனர்.தமிழகம் முழுவதும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஒருவார காலத்திற்கும் மேலாக ஆவேசமிக்கப் போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 

;