எப்ஸ்டீன் கோப்பு விவகாரத்தில் நாட்டிற்கு அவமானம் ஒன்றிய அமைச்சரவையிலிருந்து ஹர்தீப் சிங் பூரியை நீக்குக!
மோடி அரசுக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்
புதுதில்லி, பிப். 20- எப்ஸ்டீன் கோப்புகளில் மிகவும் அருவருப்பான முறையில் சிக்கி யுள்ள ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அர சியல் தலைமைக்குழு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கோரப் பட்டிருப்பதாவது: எப்ஸ்டீன் கோப்புகளின் மிகவும் அருவருப்பான மற்றும் மிகவும் மோச மான உள்ளடக்கங்கள் குறித்து நாள் தோறும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்க நீதித்துறை மற்றும் டிரம்ப் நிர்வாகம் இவற்றைப் பெரிய அளவில் மூடி மறைக்க முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், அவற்றையும் மீறி உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. எப்ஸ்டீனை தலைமைத் தரகராக கொண்ட இந்தக் கிரிமினல் வலை யமைப்பின் ஒரு பகுதியாக இருந்த அரசியல்வாதிகள், பணக்கார பேர் வழிகள், தொழில்நுட்ப ஜாம்பவான் கள் மற்றும் பிரபலங்கள் தங்களுக்கு எவ்விதமான தண்டனையும் கிடைக் காது என்ற தைரியத்துடன் மிகவும் மூர்க்கத்தனமான கிரிமினல் நட வடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக் கிறார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இக்கோப்பில் காணப்பட்டுள்ள நபர்கள் மீது பல நாடுகளில் சட்டரீதி யாக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங் கள் பறிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பலர் அந்தந்த நாடுகளில் தங்கள் பதவி களில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், இந்தியாவைச் சேர்ந்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் தொழிலதி பர் அனில் அம்பானியின் தொடர்புக்கு தெளிவான சான்றுகள் இருந்தபோதி லும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட, ஒன்றிய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்து வதையே கூட ஒன்றிய அரசு மறுத்துள் ளது. பத்திரிகையாளர் சந்திப்பிலும் பொய் சொல்லி, ஹர்தீப் சிங் பூரி வச மாக மாட்டிக்கொண்டுள்ளார். எனினும், அவரைப் பதவி நீக்கம் செய்வதற்குப் பதிலாக ஒன்றிய அரசு அவரைப் பாதுகாத்திட அனைத்து விதமான தந்திர வழிகளையும் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில், நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அவமானத்தையும் சங்கடமான நிலைமையையும் மீட்டெடுத்திட, ஹர்தீப் சிங் பூரியை ஒன்றிய அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை அரசியல் தலைமைக்குழு திட்டவட்டமான முறையில் கோரு கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கோரி யுள்ளது. (ந.நி.)
