tamilnadu

பெகாசஸ் விவகாரத்தில் தனி விசாரணைக் குழு அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு

புதுதில்லி,அக்.26- பெகாசஸ் வேவு மென்பொருள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன் பேச்சுக்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகா ரத்தில் வல்லுநர்களைக் கொண்ட தனி  விசாரணைக் குழு அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் அக்டோபர் 27 ஆம் தேதி முக்கிய உத்தரவை வழங்கவுள்ளது. இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் வேவு மென்பொருள் மூலம் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சித்  தலைவர்கள், நீதிபதிகள், ஒன்றிய அமைச்சர்கள் ,சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரின் செல்போன் பேச்சுகள் ஒட்டுக் கேட்கப்படுவ தாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பர பரப்பையும் ஏற்படுத்தியது.  இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று நாடாளு மன்றத்தில்  எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் ஒன்றிய மோடி அரசு மறுத்தது.   இதனிடையே, பெகாசஸ் விவகாரம்  தொடர்பாக உச்சநீதிமன்ற கண்காணிப் பின் கீழ் ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது பத வியில் உள்ள நீதிபதி மூலம் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதி மன்றத்தில் பத்திரிகையாளர் என்.ராம், சசிகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா உட்பட பல்வேறு தரப்பினர் சார்பில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்சநீதிமன்றத் தலை மை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.  

பெகாசஸ் செயலி மூலம் சட்டவிரோத மான முறையில் ஒன்றிய அரசு சொந்த மக்களைக் கண்காணித்ததா அல்லது இல்லையா என்பதை மட்டும் தெரிந்து கொள்ள இருக்கிறோம் என நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது. ஆனால் ஒன்றிய அரசு தரப்பில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், “இந்த விவகாரத்தில் விரிவான பிரமாணப் பத்தி ரம் அரசால் தாக்கல் செய்ய முடி யாது. இந்த விவகாரத்தில் நாட்டின் பாது காப்பு தொடர்புடையதாக இருப்பதால் வெளிப்படையாகத் தெரிவிக்க முடி யாது. என்னவிதமான மென்பொருள் கண்காணிப்புக்கும், உளவுக்கும் பயன் படுத்துகிறோம் என்பதைத் தெரிவிக்க இய லாது’’ என்று தெரிவித்தது. இது பொறுப் பற்றத்தன்மை என்று அரசியல் கட்சியினர் விமர்சித்தனர்.  இந்த வழக்கின் விசாரணை  கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி     நிறை வடைந்தது. இந்த நிலையில் இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் தனி விசாரணைக்குழு அமைப்பது தொடர்பாக அக்டோபர் 27 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.   

;