tamilnadu

img

விவசாயிகளின் வருவாய் அதிகரிப்புக்கு முன்னுரிமை

திருவனந்தபுரம், நவ.27- உற்பத்தி மற்றும் விநியோகத் துறையில் தலையிட்டு விவசாயத் தல் தன்னிறைவு அடையவும், விவ சாயிகளின் வருவாயை அதிகரிக்க வும் அரசு முயற்சித்து வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். பட்டம் மில்மா பவனில் நிறு வப்பட்ட, பசுமைப் புரட்சியின் தந்தை என போற்றப்படும் டாக்டர் வர்கீஸ் குரியனின் முழு உருவச் சிலையை ஆன்லைனில் முதல்வர் திறந்து வைத்தார்.  பின்னர் அவர் பேசுகையில், அர சின் தலையீடுகள் பால் உற்பத்தி யில் தன்னிறைவு அடைய வழிவகுத் தது. மாநிலத்தில் தினசரி பால் பயன்பாடு 80 லட்சம் லிட்டர். தற் போது மாநிலத்திற்குள் 70 லட்சம் லிட்டர் உற்பத்தி செய்ய முடிகிறது. வெள்ளமும் தொடர் மழையும் இல்லாமல் இருந்திருந்தால், பால் உற்பத்தி தன்னிறைவு என்ற இலக்கை ஏற்கனவே எட்டியிருப் போம் என்றார்.

டாக்டர். குரியன் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நிறைவு விழா மற்றும் மாநில அளவிலான பால் வள தின விழாவை முதல்வர் தொடங்கி வைத்தார். விழாவிற்கு பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிஞ்சு ராணி தலைமை தாங்கினார்.  டாக்டர். வர்கீஸ் குரியன் சிலை யை உருவாக்கிய சிற்பி உன்னி கணையை, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ சிறப் பித்தார். கேரள கால்நடை மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தின் சிறந்த பிடெக் பால் அறி வியல் மாணவர்களுக்கு வர்கீஸ் குரி யன் உதவித் தொகையையும் அமைச்சர் வழங்கினார். தேசிய பால்வள மேம்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் நந்த குமார் வர்கீஸ் குரியன் நினைவு உரை ஆற்றினார். வர்கீஸ் குரியன் மகள் நிர்மலா குரியன், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், பால்வள மேம்பாட்டு இயக்குநர் டி.கே.அனி குமாரி, மில்மா தலைவர் கே.எஸ்.மணி உள்ளிட்டோர் பேசினர்.

;