tamilnadu

img

பாஜக அரசை வீழ்த்த ஓரணியில் அணிதிரள்வோம்!

திருப்பூர், ஆக.7- பாஜக அரசை வீழ்த்த மதச்சார்பற்ற ஜன நாயக சக்திகள் ஓரணியில் அணி திரள்வோம் என்று மதச்சார்பற்ற கட்சிகளின் தலைவர்கள் சூளுரைத்தனர். திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டை முன்னிட்டு சனிக்கிழமை மாலை சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு மற்றும்  மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாடு நடை பெற்றது. இம்மாநாட்டில் பல்வேறு கட்சித் தலை வர்கள் உரையாற்றினர். அப்போது அவர்கள் பேசிய விபரம் வருமாறு:

கே.சுப்பராயன் எம்.பி.,

மாநாட்டில் வரவேற்புரை ஆற்றிய திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் கூறுகையில், அக்டோ பர் புரட்சியின் லட்சியம் ஒருபோதும் வீழ்ச்சி அடையாது. சிட்டுக்குருவிகளுக்கு வல்லூறை வீழ்த்தும் வல்லமையைக் கொடுத்தது இந்த இயக்கம். சமூகம் இணங்கி வாழ வேண்டும், பிணங்கி வாழ முடியாது. இந்த அரசியல் கட மையை நிறைவேற்றுவதில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி முன்னின்று போராடும் என்றார்.

டி.ராஜா

இந்த மாநாட்டில் துவக்கவுரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா பேசுகையில், நாடு சுதந்தி ரம் பெற்றபோதே துயரத்துடன் தான் தொடங்கி யது. இந்து, முஸ்லிம் என கலவரம் ஏற்பட்டு  ஏராளமானோர் கொல்லப்பட்டனர். சிறிது  காலத்தில் மகாத்மா காந்தியும் கொல்லப்பட் டார். இந்த சூழலில்தான் இந்திய அரசியல்  சட்டத்தை உருவாக்க வேண்டிய கடமை அம் பேத்கருக்கு இருந்தது. அவர் மிகுந்த மன அழுத்தமான சூழ்நிலையில் இப்பணியில் ஈடு பட்டார். இந்தியாவை மத அடிப்படையில் மாற்ற  முயன்ற சூழலில், அம்பேத்கர் மதச்சார்பற்ற அர சியல் சட்டத்தை உருவாக்கினார். இந்த நாட்  டுக்கு இரண்டு ஆபத்துகள் உள்ளன என்று அவர் கூறினார். இரண்டு “பி” என்று சொன்ன அவர் ஒன்று பிராமணியம், மற்றொன்று பூர்ஷ்வா (முத லாளித்துவம்) என்று அப்போதே சொன்னார். கம்யூனிஸம் ஆபத்தான தத்துவம் என்று மோடி சொல்கிறார். அவர்களது எதிரி யார் என்று  அவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது. மக்க ளுக்கான மாற்றுக் கொள்கையுடன், ஏற்றத்  தாழ்வுகளை களையக்கூடிய மதச்சார்பற்ற விரி வான அணிச்சேர்க்கையை உருவாக்குவோம், என்றார்.

இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன் பேசும்போது, ஆர்.நல்ல கண்ணுவுக்கு தகை சால் தமிழர் விருது வழங்கி யதன் மூலம் விருதுக்குப் பெருமை என்று முதல்  வர் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி நன்றி தெரி வித்தார். அத்துடன் சிவகங்கை மாவட்டம் சிரா வயலில் ஜீவா ஆசிரமத்தில் காந்தியடிகள் வந்து  சந்தித்ததன் நினைவாக சிராவயலில் நினைவு  மண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை யை ஏற்று அங்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என தமிழக முதல்வர் அறிவித்ததற்கும் அவ ருக்கு நன்றி தெரிவித்துப் பேசினார். 

ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவா ஹிருல்லா பேசுகையில், என்றென்றும் மனித நேயத்தைப் பேணும் மண்ணாக நம் மண் இருந்தி ருக்கிறது. வெள்ளையர்களுக்கு எதிராக போரா டிய திப்புசுல்தானுக்கு உதவியாக தோளோடு,  தோள் சேர்ந்து போர் புரிந்தவர் தீரன் சின்ன மலை. இந்த வரலாற்றை சங் பரிவாரம் சிதைக்கப் பார்க்கிறது. சாதி மத வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒரே வரிசையில் நின்றுதான் வெள்  ளையர்களை விரட்ட முடிந்தது. ஆர்எஸ்எஸ் பாஜக முஸ்லிம்களுக்கு எதிரானது மட்டுமல்ல,  சமூக நல்லிணக்கம், மாநில உரிமையை பறிக்கும் சித்தாந்தத்தைக் கொண்டதாகும். இவர்களைத் தோற்கடிக்கும் வல்லமை இடது சாரிகளுக்கு உண்டு என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது, என்றார்.

காதர் மொஹைதீன்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத்  தலைவர் காதர் மொஹைதீன் பேசுகையில், வேற்றுமையில் ஒற்றுமை என்ற நீண்ட பாரம்பரி யம் கொண்டது நம் நாடு. ஜனநாயகத்தின் ஆணி வேராக இருக்கும் அரசியல் சட்டம் நிலை நிறுத்தப்பட வேண்டும். அதற்கான ஆற்றல் நம்  மக்களிடம் உள்ளது. பாசிசத்தைத் தடுத்து நிறுத்தி ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனை வரையும் ஒன்றுபடுத்தியாக வேண்டும், என்றார்.

தொல்.திருமாவளவன் எம்.பி.,

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், ஜனநாயக சக்தி களை ஒருங்கிணைக்கும் களமாக இம்மாநாடு நடக்கிறது. தமிழகத்தைத் தாண்டி தேசிய அள வில் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை இருக்கி றது. 2024இல் மிக மிக கவனமாக தேசிய பார்வை யுடன் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைக்க இடதுசாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார். 

கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழ கிரி பேசும்போது, நாடு விடுதலை பெற்று சமூக நல்லிணக்கம், பொருளாதார மேம்பாடு, சமூக நீதி, மொழி உரிமை எல்லாம் பெற்றுக் கொடுத்தி ருக்கிறோம். இதற்குப் பிறகும் இதற்கு நேர் எதி ரான ஆர்எஸ்எஸ் தத்துவம் தலை தூக்குகிறது என்றால் அதற்கான காரணத்தை நாம் கண்டு பிடிக்க வேண்டும். இடதுசாரிகளை விட தியா கம் செய்தவர்கள் யாரும் இருக்க முடியாது. பாஜக ஆர்எஸ்எஸ்-ஐ வீழ்த்தி மாபெரும் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசு கையில்,  2024இல் பாஜக ஆட்சி பீடம் ஏறக்  கூடாது, அதற்கான திட்டத்தை எப்படி உரு வாக்குவோம் நமது பணி தீயணைப்பு நிலையம் போன்றது.  தீயணைப்பு வீரர்கள் எப்போதும், எதற்கும் தயா ராக இருப்பார்கள். அது போல நம் நாட்டைப்  பற்றிய மதவெறித் தீயை அணைக்க நாம் எப்போ தும் எதற்கும் தயாராக இருப்போம். பாஜக வித்தைகளைக் காட்டி ஆட்சியில் இருக்கிறது. இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்தில் தேர்தல்  வர இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் கொள்கைக் கூட்டணி போல் இந்தியா முழு வதும் உருவாக வேண்டும் என்றார்.   இந்த மதநல்லிணக்க பாதுகாப்பு, மாநில  உரிமை மீட்பு மாநாட்டில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், சிபிஐ புதுச்சேரி மாநிலச் செயலாளர் சலீம் உள்ளிட்டோர் பேசி னர்.







 

;