tamilnadu

img

விவசாயிகள் எழுச்சியின் ஓராண்டு நிறைவு

தருமபுரி, நவ.26- வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் தில்லியில் நடை பெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் ஓர்  ஆண்டு நிறைவையொட்டி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொட ரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங் களை திரும்பப் பெறுகின்ற ‌தீர்மானம் கொண்டு வந்து, அதன் நடைமுறைகளை நிறைவேற்ற வேண்டும். அனைத்து விவசாய பொருட்க ளுக்கும்  குறைந்தபட்ச‌ ஆதார விலை கிடைக்க சட்டம் இயற்ற வேண்டும். மின்சார சட்ட திருத்த மாசோதா 2020-ஐ திரும்பப்பெற வேண்டும். போராட்டத்தில் உயிரிழந்த அனைத்து விவசாயி களின் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நாடு முழுவ தும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதன்ஒருபகுதியாக தருமபுரி தபால் நிலை யம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோ.அருச்சுணன்‌ தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநில துணைத்தலைவர் டி.ரவீந்திரன்,  மாவட்ட தலைவர் கே.என்.மல்லையன், நிர்வாகி கள் எஸ்.எஸ்.சின்னராஜ், தீர்த்தகிரி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர்‌ எம்.முத்து, மாவட்ட பொருளாளர் இ.கே.முருகன், மாவட்ட துணைத் தலைவர் கே.கோவிந்தசாமி, தமிழ்நாடு விவசாய தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜே.பிரதாபன், அகில இந்திய விவசாயிகள் மஞ்ச் அமைப்பின் மாவட்ட செயலாளர் கொ.கோவிந்தராஜ், விவசா யிகள் பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட தலை வர் கிள்ளிவளவன், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரங்க நாயகி, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட தலைவர் கோபிநாத், மக்கள் ஜனநாயக இளை ஞர் அணி மாவட்ட தலைவர் பழனி, இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஆ.ஜீவா னந்தம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க  மாவட்ட தலைவர் ஏ.ஜெயா, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் பி.இளம்பரிதி, ஆர்.சிசுபாலன், வே.விசு வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சேலம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நடை பெற்ற பேரணியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.ராமமூர்த்தி, நிர்வாகிகள் என்.கே.செல்வராஜ், ஏ.சந்திரமோகன், நடராஜன், கே.பாலசந்திரன், ஆர்.சங்கரய்யா, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேதுமாதவன், வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன்குமார், காங்கிரஸ் மாந கர் மாவட்ட தலைவர் பாஸ்கரன், மாதர் சங்க  மாவட்ட பொருளாளர் ஜெயலட்சுமி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கந்தசாமி,  தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஏ.பொன்னு சாமி, மாவட்ட துணைச் செயலாளர் எம்.ராமசாமி, மாவட்ட துணைத்தலைவர் பி.அரியாக்கவுண் டர், மாவட்டக்குழு உறுப்பினர் ஆறுமுகம், விவ சாயிகள் சங்க (சிபிஐ) மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

காடையாம்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.கணபதி, மாவட்ட துணைத்தலைவர் ஏ.சின்ராஜ், ஒன்றிய செய லாளர் எம்.ராஜா, வட்ட தலைவர் ஜி.ஜெயக் கொடி, சிபிஎம் ஓமலூர் தாலுகா செயலாளர் என். ஈஸ்வரன், சிஐடியு நிர்வாகிகள் சேகர், வெண் ணிலா, சசிகலா உள்ளிட்ட 500க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங் கிணைப்பாளர் ஆர்.குமார் தலைமை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் செ.முத்துக்கண்ணன், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன், தமிழக கட்சி சார்பற்ற விவசாயி கள் சங்க தலைவர் ஏ.காளிமுத்து, உழவர் உழைப் பாளர் கட்சி மாவட்ட தலைவர் கே.ஈஸ்வர மூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.சின்னசாமி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சி.சுப்பிரமணியம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். 

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் மு.து.செல்வராஜ் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலா ளர் பி.பெருமாள், தமிழ்நாடு பால் உற்பத்தியா ளர் சங்க மாவட்ட செயலாளர் வி.சதாசிவம், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய நிர்வாகி எஸ்.சசிகுமார், வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் கே.சிவச்சந்திரன், ஒன்றிய பொருளா ளர் ஆர்.ஜெயராமன், கிளைச் செயலாளர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளிப் பாளையம் ஒன்றியம், கொக்கராயன்பேட்டை யில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில், சங்கத்தின் மாவட்ட தலைவர் சி.துரைசாமி, மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.சம்பூரணம், ஒன்றிய செயலாளர் கே.மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.

;