மதுரை, நவ.19 - மதுரை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இரட்டை தியாகிகள் மாரி - மண வாளன் 45 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி மதுரை வடக்கு-2 ஆவது பகுதிக் குழுவுக்கு உட்பட்ட மீனாம்பாள்புரம் பி.பி.குளம் மெயின் சாலையில் உள்ள தோழர்கள் மாரி - மணவா ளன் நினைவிடத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. பகுதிக்குழு செயலாளர் ஏ.பாலு தலைமை வகித் தார். மாநில செயற்குழு உறுப் பினர் எஸ். கண்ணன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக் குழு உறுப்பினர் இரா. விஜயரா ஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜா.நரசிம்மன், எம்.பாலசுப்பிரமணியம், ஆர். சசிகலா, பகுதிக்குழு செயலாளர்கள் வி.கோட்டை சாமி, பி.வீரமணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே. அலாவுதீன், ஏ.பி. சிவராமன், பி. மல்லிகா, மாமன்ற உறுப் பினர் டி.குமரவேல் உள்ளிட் டோர் தியாகிகள் மாரி - மணவாளன் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு மாலை அணி வித்தும் மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். நினைவஞ்சலி நிகழ்ச்சி யில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் பேசுகையில், “தோழர் மாரி ஒரு கட்டுமானத் தொழிலாளி யாகவும், மணவாளன் இந்தி பண்டிட்டாகவும் இருந்தவர்கள். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மக்களின் உரிமைகளுக்காக போராடியவர்கள். இந்த நிலை யில்தான் 1949 ஆம் ஆண்டு நேருவின் ஆட்சி காலத்தில் தெலுங்கானாவில் ஆயுதம் ஏந்திய போராட்டம் நடை பெற்றது. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலம் அது. மதுரையின் இரட்டை தியாகிகளான மாரி - மண வாளன் நவ.19 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அதே போல்தான் சேலம் சிறையில் நடைபெற்ற போராட்டத்தி லும் ஏராளமான தோ ழர்கள் சுட்டுக் கொல்லப்பர் டார்கள். பிரிட்டிஷ் அர சாங்கத்தை இந்தியாவை விட்டு வெளியேற்றிய பின் அமைந்த முதல் அரசாங்கம் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக பல்வேறு அடக்கு முறைகளில் ஈடுபட்டது. இதை வெளியுல கத்திற்கு எடுத்துச் சொன்ன தற்காகவே தோழர்கள் மாரியும், மணவாளனும் சுட்டுக் கொல்லப்பட்டார் கள். அதேபோல் தான் சேலம் தியாகிகள், தூக்கு மேடை தியாகி பாலு ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். எனவே ஒவ்வொரு ஆண்டும் இவர்களுடைய நினைவு நாளில் இவர்களுடைய வர லாற்றை அடுத்த தலை முறைக்கு எடுத்துச் செல்வ தால்தான், இன்றைக்கு சுதந்திரமாக எழுதவும், பேசவும் முடிகின்றது. இவை அனைத்திற்குப் பின்பும் செங்கொடி இயக் கத்தின் மகத்தான போராட் டங்கள் இருக்கிறது என்பதை நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதுதான் தோழர் மாரி, மணவாளன் ஆகியோருக்கு நாம் செலுத் தும் அஞ்சலியாகும். அந்த வகையில் இந்த இரட்டை தியாகிகளுக்கு நாம் செவ்வஞ்சலியையும் வீரஞ்சலியையும் செலுத்து வோம். தோழர்களின் தியா கங்களை, கம்யூனிஸ்ட் இயக் கத்தின் வரலாறுகளை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்வோம்” என்றார்.