tamilnadu

ஆப்கானியர்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் உணவுத் திட்ட இயக்குநர் பேட்டி

ஜெனீவா, அக். 26 - ஆப்கானிஸ்தான் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. நாட்டை உடனடியாக மீட்டெடுக்க அவசரகால நடவடிக்கை தேவை. தவறினால் குழந்தைகள் உட்பட  பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என உலக உணவுத் திட்ட வல்லு நர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து  உலக உணவுத் திட்டத்தின் (WFP) இயக்கு நர் டேவிட் பீஸ்லி கூறுகையில், “கடந்த இரண்டு மாதங் களில், கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் ஆப்கானியர்களின் எண்ணிக்கை 8.8 மில்லி யனாக அதிகரித்துள்ளது.  நகர்ப்புற மக்களும் கிராமப்புறங் களில் வசிக்கும் மக்களைப் போல் உணவுப் பாது காப்பின்மையை முதன்முறையாக எதிர்கொண்டு வருகின்ற னர். ஆகஸ்ட் முதல், ஆப்கானிஸ்தானில் தலிபான் அதி காரத்தைக் கைப்பற்றியதால் அரசியல் மற்றும் சமூக  நெருக்கடியில் மூழ்கியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பில்லியன் கணக்கான டாலர்கள் உதவி தேவைப்படுகிறது. கடந்த 70 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானின் சராசரி ஆண்டு வெப்பநிலையை 1.8C ஆக அதிகரித்துள்ளது.  இதனால் ஏற்பட்ட பருவநிலை மாற்றத்தால் உணவுப் பற்றாக் குறை அதிகரித்துள்ளது. நாங்கள் கணித்தது, எதிர்பார்த்த தை விட மிக வேகமாக நடந்துள்ளது.  பல ஆப்கானியர்கள் உணவு வாங்குவதற்காக உடைமைகளைவிற்கிறார்கள்.  இப்பிரச்சனையைத் தவிர்க்க வேண்டும். மனிதாபிமான  அடிப்படையில் உதவவேண்டும். உதவிக்காக சர்வதேச சமூகத்தின் அபிவிருத்தி நிதியையோ அல்லது  ஐ.நா  மூலம்  முடக்கப்பட்ட நிதியையோ  பயன்படுத்த வேண்டும்.  மனிதாபிமானப் பிரச்சனைகள் அரசியலாக்கக் கூடாது. உதவி செய்வதாகக் கூறிய சில நன்கொடை யாளர்கள் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டனர்” என்றார் பீஸ்லி.

;