tamilnadu

img

குடோன் சுமைப் பணியாளர்களுக்கு போனஸ் வழங்க கோரிக்கை

கடலூர், செப். 26- டாஸ்மாக் குடோன் சுமை பணியாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும்  என்று மாநில ஒருங்கி ணைப்பு குழு கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் சிஐடியூ மாநில ஒருங்கி ணைப்பு குழு கூட்டம் கடலூர்  புதுப்பாளையத்தில் ஞாயிற் றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு சம்மேளன உதவி தலைவர் வி.குமார் தலைமை தாங்கினார்.  எம்.தண்டபாணி, என்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்  தனர். சம்மேளனத்தின் தலை வரும், ஒருங்கிணைப்புக் குழுவின் கன்வீனருமான  எஸ்.குணசேகரன் வேலை அறிக்கையை சமர்ப்பித்து பேசினார்.  சிஐடியு மாவட்ட இணைச்செயலாளர் வி.சுப்பு ராயன் வாழ்த்துரை வழங்கி னார். மாநில பொதுச் செயலா ளர் ஆர்.வேங்கடபதி நிறை வுரை ஆற்றினார்.  டி.சரவ ணன் நன்றி கூறினார். டாஸ்மாக் குடோன் சுமை பணியாளர்களுக்கு டாஸ்மாக் கடை பணி யாளர்கள், தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷனில் சுமை பணியாளர்கள் ஆகி யோருக்கு வழங்குவது போல் 20 சதம் போனஸ் வழங்க வேண்டும்.  தமிழ கம் முழுவதும் 43 டாஸ்மாக்  குடோன் களில் 2500  சுமைப்பணி தொழிலாளர் கள் வேலை செய்து வரு கிறார்கள் இவர்களுக்கு ஏற்றுக் கூலி பாக்கியினை  உடனடியாக வழங்க வேண்டும்.   பணியாளர்களுக்கு பெட்டிக்கு ஏற்று கூலியாக ரூபாய் 3.50  வழங்க வேண்டும்.  அதேபோல் பிஎப்,  இபிஎப் பலன்கள், மருத்துவ உதவிகள், சலு கைகள் கிடைக்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.

;