tamilnadu

img

கல்லூரி மாணவிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதா?

புதுக்கோட்டை, ஆக.18-  புதுக்கோட்டை டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அரசு மகளிர் கலை,  அறிவியல் கல்லூரியில் மாணவிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கண்டி த்து இந்திய மாணவர் சங்கத்தினர் தலைமையில் புதனன்று காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. கல்லூரியின் வரலாற்றுத் துறையில் 2021-22-ஆம் ஆண்டு கல்வி ஆண்டு மாணவிகளிடம் பருவக் கட்டணம் என்ற பெயரில் எவ்வித ரசீதும் கொடுக்காமல் கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளனர். இதற்கு மாணவிகள் கேள்வி கேட்டும் சரியான பதில் இல்லை. இதனைத் தொடர்ந்து புதனன்று கல்லூரி மாணவிகள் இந்திய மாணவர் சங்கத்தினர் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு காத்திருக்கும் போராட்ட த்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாண வர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சா.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அ.சந்தோஷ்குமார், துணைத் தலைவர் வசந்தகுமார், துணைச் செயலாளர்கள் கார்த்திகா தேவி, பாலாஜி மாவட்டக் குழு உறுப்பினர்கள் மகாதீர், அன்பரசன், நந்தனா, மகாலெட்சுமி, அருண்குமார் மற்றும் கல்லூரி மாணவிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய கோட்டாட்சியர் கி.கருணாகரன், வட்டாட்சியர் விஜய லெட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்து  முறையான விசாரணை நடத்தி நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த னர். இதனைத் தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

;