tamilnadu

img

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளி - கல்லூரிகள் திறப்பு...  மதுரையில் மாணவர்கள்  உற்சாகம்...  

புதுச்சேரி, செப். 1- கொரோனா பரவலை தடுக்கும் வகை யில் நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. மீண்டும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால் கொரோனா 2ஆவது அலை மார்ச்சில் மீண்டும் பரவத் தொடங்கியதால் பள்ளி, கல்லூரிகள் மூடப் பட்டன. புதுவையில் கடந்த ஒன்னரை ஆண்டு கால மாக 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட வில்லை. 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்க ளுக்கு மட்டும் ஒரு சில வாரங்கள் பள்ளிகள்  திறக்கப்பட்டன. கொரோனா பாதிப்பால் பொதுத்தேர்வு நடத்தப்படாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறி விக்கப்பட்டனர். கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. அதேநேரத்தில்  கொரோனா 3ஆவது அலை பரவ வாய்ப்புள்ளதாக நிபுணர்களும், ஒன்றிய அர சும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.  

இதனிடையே கடந்த ஜூன் 16ஆம் தேதி பள்ளி கள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி  அறிவித்தார். ஆனால் கொரோனா பரவல் முற்றிலும் குறையாததால் பள்ளிகள் திறப்பு  ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பள்ளிகள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. மேலும் பள்ளிகள் திறப்பில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு தல்களும் வெளியிடப்பட்டது. இதற்காக கடந்த 30ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்  பட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன.  பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தனிமனித இடைவெளி யுடன் மாணவர்கள் அமரும் வகையில் வகுப்  பறைகளில் இருக்கைகள் அமைக்கப்பட்டன. மாணவர்களுக்கு வழங்க பாடபுத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலை யில் வைக்கப்பட்டன. அரசு அறிவித்தபடி புதன்கிழமை (செப். 1)  பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. 9, 11ஆம்  வகுப்புக்கு பள்ளிகள் புதனன்று திறக்கப் பட்டன.

5 மாதங்களுக்கு பிறகு 9 மற்றும் 11ஆம்  வகுப்பு மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு  வந்தனர். மாணவர்களுக்கு உடல் வெப்ப பரி சோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி வழங்  கப்பட்டு பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர். வருகை பதிவேடு கட்டாயம் இல்லை என கல்வித்துறை அறிவித்திருந்தது. இதனால் ஒருசில பள்ளி, கல்லூரிகளில்  மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தது. 5 மாதங்களுக்கு பிறகு தங்கள்  நண்பர்களை சந்தித்த மாணவர்கள் ஒரு வருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னர். சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது. 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமையிலும், 10, 12ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்  கிழமையிலும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

;