tamilnadu

img

நாடு முழுவதும் பேரணிகள்

புதுதில்லி/சென்னை, நவ. 26 - இந்திய விவசாயிகளின் பேரெழுச்சி நவம்பர் 26 வெள்ளியன்று ஓராண்டை நிறைவு செய்தது. மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடியை அறிவிக்க வைத்து, அமைச்சரவையிலும் அதை நிறைவேற்றி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள் வதற்கு உந்தித் தள்ளிய இந்த மகத்தான பேரெழுச்சி, குறைந்தபட்ச ஆதாரவிலையை சட்டப்பூர்வ மாக்க வேண்டும் என்பதுள்ளிட்ட இதர கோரிக்கை களை முன்வைத்து, ஒரு பகுதி வெற்றிக் கொண்டாட்ட மாகவும், அதேவேளையில் அரசாங்கத்தை நிர்ப்பந்தி க்கும் விதமாகவும் எழுச்சிமிகு, உணர்ச்சிமிகு பேரணிகளை நாடு முழுவதிலும் நடத்தியது.

சுமார் 500 விவசாயிகள் அமைப்புகள் ஒன்றி ணைந்த சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் (ஐக்கிய  விவசாயிகள் முன்னணி) அழைப்பின் பேரில், ஓராண்டு நிறைவை கொண்டாடும் விதமாக, தலை நகர் தில்லியைச் சுற்றி விவசாயிகள் முற்றுகை யிட்டுள்ள சிங்கு, திக்ரி, காஸிப்பூர், பல்வால், ஷாஜகான்பூர் ஆகிய எல்லைகளிலும், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிர தேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா உள்பட அனைத்து மாநிலங்களிலும் எழுச்சிமிகு விவசாயிகள் பேரணிகள் நடைபெற்றன. 

காஸிப்பூர் எல்லையில் நடைபெற்ற நிகழ்வில்  பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த விவசாயிகளி டையே அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலை வர் டாக்டர் அசோக் தாவ்லே, பாரதிய கிசான் யூனியனின் தேசியத் தலைவர் ராகேஷ் திகாயத் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா பங்கேற்று உரையாற்றினார். தமிழகத்தில் ஈரோட்டில் நடைபெற்ற மாபெரும் பேரணி - கருத்தரங்கில் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், அகில இந்திய விவசாயிகள் சங்க இணைச் செயலாளர் விஜு கிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.  

தமிழகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில் மழை, வெள்ளம் பாதித்த சில மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் எழுச்சிமிகு பேரணி கள் நடைபெற்றன.  அதேவேளையில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தொமுச உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்த அழைப்பின்பேரில் கொடிய தொழிலாளர் சட்டங்கள், மின்சார மசோதா, வேளாண் சட்டங்கள் ஆகிய அனைத்து மக்கள் விரோத - தேசவிரோத சட்டங்களை முற்றாக ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

;