tamilnadu

img

இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள்

வேலூர, ஆக. 17 - வேலூரில் நடைபெற்ற தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் 35வது பொது மாநாடு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இம்மாநாட்டில் காப் பீட்டு பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெற வேண்டும். தேசிய சொத்துக் களை பணமாக்கக்  கொள் கையை கைவிட வேண்டும்.  4 தொழிலாளர் சட்ட தொகுப் புகளை திரும்பப் பெற  வேண்டும். நாடாளு மன்றத்தில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சாதி ஆணவக் கொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் உரு வாக்க வேண்டும். எல்ஐசி  ஊழியர்களுக்கு 01.08.2022ல் இருந்து 40விழுக்காடு ஊதிய  திருத்தம் எல்ஐசி நிர்வாகம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து, எல்ஐசி ஊழியர்களுக்கு 1995 ஆம் ஆண்டு வரை யறுக்கப்பட்ட பலன் ஓய்வூ தியத் திட்டங்களை செயல் படுத்த வேண்டும். கூடுதல் சாதாரண விடுப்பை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள் 

மாநாட்டில் புதிய  நிர்வாகிகள்  தேர்ந்தெடுக் கப்பட்டனர். தலைவராக பி.பி.கிருஷ்ணன், பொதுச்  செயலாளராக டி.செந்தில் குமார், பொருளாளராக எஸ்.சிவசுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். துணைத் தலைவர்க ளாக ஆர்.தர்மலிங்கம், ஆர்.சர்வமங்களா, ஆர்.ப்ரீத்தி, சி.முத்துகுமாரசாமி, இணைச் செயலாளர்க ளாக ஆர்.கே.கோபிநாத் எஸ்.ரமேஷ் குமார்,வி.சுரேஷ், ஐ.கே.பிஜூ, மற்றும் உதவிப் பொருளாளராக வி.ஜானகிராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
 

;