tamilnadu

img

மீன்வள பல்கலை.யின் மேலாண்மைக்குழு உறுப்பினராக நாகை மாலி எம்எல்ஏ தேர்வு

நாகப்பட்டினம், செப்.19 -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி மீன்வளப் பல்கலைக்கழகத்தின் மேலாண்மைக்குழு உறுப் பினராக தேர்வு செய்யப்பட்டுள் ளார். நாகப்பட்டினத்தை தலைமை யிடமாகக் கொண்டு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இப்பல்கலைக்கழகம் 2012-ல் உருவாக்கப்பட்டது. இதன் உறுப்பு கல்லூரிகள் ஆறு இடங்களில் செயல்படுகின்றன. தூத்துக்குடி, திருவள்ளுவர் மாவட்டத்தில் பொன்னேரி, சென்னை மாதாவரம், தஞ்சாவூர், கன்னியாகுமரி மாவட்டத்தில் பரக்கை, நாகப்பட்டினம், தலைஞாயிறு ஆகிய இடங்களில் மீன்வளக்கல்லூரி, மீன்வள பொறியியல் கல்லூரி, மீன் வள பயிற்சி மற்றும்  ஆய்வு மையம் ஆகியவை செயல்படுகிறது. இந்நிலையில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மேலாண்மைக்குழு உறுப்பினராக சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்டமன்ற  தொகுதி உறுப்பினருமான நாகைமாலி தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

;