tamilnadu

img

மோகன் பகவத் பேச்சு மதமோதலை உருவாக்கும்

கடலூர்,அக்.18-  மத மோதலை உருவாக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசி வருவதாகவும் அவரது பேச்சு  கண்டனத்திற்கு உரியது என்றும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். கடலூரில் திங்களன்று (அக்.18)  செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அண்மையில் இந்தியாவில் இந்துக்களின்  எண்ணிக்கையை விட இஸ்லா மியர்களின் எண்ணிக்கை விகிதம் அதி கரித்து வருவதாகவும் இது ஆபத்தான போக்கு என்றும் தெரிவித்து உள்ளார்.  

ஆனால், உண்மை அதற்கு நேர்மாறாக உள்ளது. இந்தியாவில் 80 சதவீதம் இந்துக்கள்தான் உள்ளனர். சிறுபான்மையினர் அதிகரித்து இந்துக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பது போன்று பேசி உள்ள அவரின் பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறேன். இரு மதங்களுக்கு இடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் வகையில் பேசிய அவரை ஏன் கைது செய்யவில்லை. மேலும்,  இந்து கோயில்களை இந்து அமைப்பு களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மோகன் பகவத் தெரிவித்து உள்ளார். கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி பழங்கால பண்பாட்டுச் சின்னங்களாகவும், பொக்கிஷங்களாகவும் இருந்து வருகிறது. அதனை எப்படி தனியாரிடம் ஒப்படைப்பது? இந்து அமைப்பினர் என்றால் எந்த அமைப்பு?  இது கோயில்களில் உள்ள சொத்துக் களைக் கபளீகரம் செய்யும் முயற்சி யாகவே இந்த கோரிக்கையைக் கருத வேண்டியுள்ளது.  இந்த கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கக் கூடாது. பிறமதத்தினரையும் சேர்த்திடுக! தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை மூலமாக 4 கல்லூரிகள் திறக்கப்படும் நேரத்தில் அங்கே இந்துக்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரையும் பணியில் அமர்த்த வேண்டும். கல்லூரியை உயர்கல்வித் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்.   அதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும். அதேநேரத்தில் கடந்த ஐம்பது ஆண்டு களுக்கு மேலாகக் கோயில் இடங்களில் குடியிருப்பவர்களுக்கு 3 சென்ட் குடிமனை  பட்டா வழங்கவும் அரசு நடவடிக்கை வேண்டும். 

வங்கிகள் தொல்லை

தமிழகத்தில் சிறுகுறு தொழில் முனை வோருக்கு வங்கி நிர்வாகம் தொடர்ச்சி யாகத் தொல்லை கொடுத்து வருகிறது.  வாங்கிய கடனுக்காகச் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் வங்கி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. தமிழக  அரசு இதுதொடர்பாக ஒன்றிய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது  சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் கோ.மாதவன் ஆகியோர் உடன் இருந்தனர்.         (ந.நி.)
 

 

;