tamilnadu

img

மோடி அரசு அறிவிக்கப்படாத அவசர நிலையை நடைமுறைப்படுத்துகிறது: கே.பாலகிருஷ்ணன்

மோடி அரசு அறிவிக்கப்படாத அவசர நிலையை நடைமுறைப்படுத்துகிறது: கே.பாலகிருஷ்ணன்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 28- “1975 அவசர நிலையை விடவும் கொடூரமான அறிவிக்கப்படாத அவசர  நிலையை மோடி அரசு இன்று நடை முறைப்படுத்திக் கொண்டிருக்கிறது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார். “அவசர நிலையின் 50-வது  ஆண்டும், மோடி அரசின் அறிவிக்கப்  படாத அவசர நிலையும்” என்ற தலைப்  பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் திருச்சியில் வியாழனன்று  சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.  இதில், பங்கேற்று சிறப்புரையாற்று கையில் கே.பாலகிருஷ்ணன் இத னைத் தெரிவித்தார்.

1975 அவசர நிலையின் கொடுமைகள்

தொடர்ந்து உரையாற்றிய கே. பால கிருஷ்ணன், “1975 ஜூன் 26 அன்று அறி விக்கப்பட்ட அவசர நிலையின் கொடு மைகள் இன்றைய புதிய தலை முறைக்கு தெரிவதில்லை. 50 ஆண்டு கள் ஆனதால் 50 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு மட்டுமே அந்த கொடூரத் தின் தன்மை தெரியும்” என்றார். “இந்தியாவில் அவசர நிலை  மூன்று முறை பிரகடனப்படுத்தப்பட் டது. 1962இல் சீன - இந்திய யுத்தம், 1971-இல் இந்திய - பாகிஸ்தான் யுத்தம்  ஆகியவற்றின் போது, பாதுகாப்புக் காரணங்களுக்காக அவசர நிலை  அறிவிக்கப்பட்டது. ஆனால், 1975-இல் இந்திராகாந்தி அறிவித்த அவ சர நிலையானது, அவரது அரசியல் நலன்களைக் காப்பாற்றுவதற்காகவே மேற்கொள்ளப்பட்டது” என்று விளக்கி னார்.

தமிழ்நாட்டில்  அவசர நிலை எதிர்ப்பு

“திமுக ஆட்சி நடைபெற்ற தமிழ்  நாடு அவசர நிலையை எதிர்த்து தீர்மா னம் நிறைவேற்றியது. தமிழ்நாட்டில் அவசர நிலையை அமல்படுத்த மாட் டோம் என்று கலைஞர் கருணாநிதி அறிவித்தார். இந்தியா முழுவதும் இருண்ட காலத்தில் தமிழ்நாடு மட்டுமே சுதந்திர மாநிலமாக இருந்  தது” என்று பாலகிருஷ்ணன் குறிப் பிட்டார். “ஆனால் 1975 டிசம்பர் 31 அன்று  திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, தமிழ்  நாட்டிலும் அவசர நிலை அமல்படுத் தப்பட்டது. நெல்லிக்குப்பத்தில் தொழிற்சங்க கட்டடத்தின் திறப்பு விழா வின்போது தோழர்கள் வி.பி.சிந்தன்,  சி.கோவிந்தராஜன் ஆகியோரை கைது செய்ய வந்த 500 காவலர்களி டமிருந்து தப்பித்த வரலாற்று நிகழ்வு என்னால் மறக்க முடியாதது” என்றார்.

மிசா சட்டத்தின் கொடுமை

“மிசா சட்டத்தின் கீழ் எந்த காரண மும் தெரிவிக்காமல், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் யாரையும் கைது செய்து சிறையில் அடைக்கலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டது. அரசியலமைப்பின் 21ஆம் பிரிவின் கீழான அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. கூட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது. அர சாங்கத்தை விமர்சிக்கும் உரிமை கூட  மறுக்கப்பட்டது” என்று தெரிவித்தார். “ஒரே இரவில் ஆயிரக்கணக்கான அரசியல் தலைவர்கள் கைது செய் யப்பட்டனர். திருச்சியில் உமாநாத், பாப்பா உமாநாத், பி. ராமச்சந்திரன், கே.வரதராசன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தலைமறைவாக இருக்க வேண்டிய தாயிற்று. கைதாகி சிறைகளில் அடைக்கப்பட்ட தோழர்களுக்கு நடந்த கொடுமைகள் கொடூரமா னவை. சிறைகளில் சித்ரவதைகள் சாதாரணமான விஷயமாக மாறின. சிலர் அடித்தே கொல்லப்பட்டனர். மேற்குவங்கம் மற்றும் கேரளத்தில் குறிப்பாக கொடூரமான அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப் பட்டது” என்றார். “42ஆம் திருத்தச் சட்டம் உட்பட பல அரசியலமைப்பு திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டதால் மிகப்  பெரிய இழப்பு தொழிலாளர் வர்க்கத் திற்கும், உழைப்பாளி மக்களுக்கும் ஏற்பட்டது” என்று குறிப்பிட்டார். 1977 ஜனநாயக வெற்றி “இந்த எதேச்சதிகாரத்தை எதிர்த்து நாடு முழுவதும் மதச்சார்பில்லாத கட்சி கள் ஒன்றுதிரண்டு போராடின. தமிழ் நாட்டில் திமுக உட்பட அனைத்து ஜன நாயக கட்சிகளும் இணைந்து செயல்பட்டன. 1977 தேர்தலில் இந்த ஜனநாயக ஒற்றுமையின் விளைவாக காங்கிரஸ் ஆட்சி வீழ்த்தப்பட்டது. பிர தமர் இந்திராகாந்தி கூட தேர்தலில் தோல்வியடைந்தார். குறிப்பிடத்தக்க வகையில், 1972 தேர்தலில் காங்கிரஸ் அதன் வரலாற்றிலேயே அதிகபட்ச வெற்றியைப் பெற்றிருந்தது - ஜவஹர்  லால் நேரு காலத்தில் கூட அவ்வ ளவு பெரிய வெற்றி கிடையாது. ஆனால் அவசர நிலையின் கொடுமை கள் காரணமாக 1977இல் காங்கிரஸ்  மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட் டது” என்று குறிப்பிட்டார்.

அறிவிக்கப்படாத  அவசர நிலை

இன்று மோடி ஆட்சியில் அவசர நிலை அறிவிக்கப்படவில்லை. ஆனால்  நடைமுறையில் அறிவிக்கப்படாத அவசர நிலை நடைபெறுகிறது. ஒரு  நபர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படு கிறது. 1975 அவசர நிலையை விட  அல்லது அதைத் தாண்டிய கொடு மைகள் இன்று அரங்கேற்றப்படுகின் றன” என்று குற்றம் சாட்டினார். “இது எதிர்க்கட்சிகளின் குற்றச் சாட்டு அல்ல. மோடி அரசில் ஒன்றிய  அமைச்சராக இருந்த பீகாரைச் சேர்ந்த பாஜக தலைவர் பதவி ராஜி னாமா செய்கையில் தெளிவாகக் குறிப்பிட்டார்: ‘அரசியலமைப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்ட அமைச்சரவையை சிதைத்து, இந்த  நாட்டில் ஒரு நபர் ஆட்சியை நடத்து வதை என்னால் ஏற்க முடியவில்லை’” என்று பாலகிருஷ்ணன் மேற்கோள் காட்டினார்.

ஒற்றுமைக்கு அழைப்பு

இன்றைய அறிவிக்கப்படாத அவசர நிலையை எதிர்த்து, 1977-இல் ஜனநாயக சக்திகள் ஒன்றுதிரண்டது போல் மதச்சார்பில்லாத சக்திகள் மீண்டும் ஒன்றுதிரள வேண்டும். ஜன நாயக உரிமைகளை மீட்டெடுக்க, அர சியலமைப்பைக் காப்பாற்ற, மக்க ளாட்சியை நிலைநாட்ட இது அவசி யம்” என்று கே. பாலகிருஷ்ணன் வலி யுறுத்தினார்.