tamilnadu

img

மாணவர்களுக்கு கல்வித்தொகை தராமல் ஏமாற்றும் மோடி அரசு

மாணவர்களுக்கு கல்வித்தொகை தராமல் ஏமாற்றும் மோடி அரசு ரூ.5,485 கோடி தேக்கம் ; அம்பலப்படுத்திய சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ்

புதுதில்லி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் நாடாளுமன்றத்தில் பட்டியல் (எஸ்சி) மற்றும் பழங்குடியினர் (எஸ்டி), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி), பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினர் (இபிஎஸ்) மற்றும் சீர்மரபினர் (டிஎன்டி) மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட கல்வி உதவித்தொகை குறித்து கேள்வி எழுப்பினார்.  இந்த கேள்விக்கு மார்ச் 11  அன்று ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணைய மைச்சர் ராம்தாஸ் அத்வாலே எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். இந்த எழுத்துப் பூர்வமான அறிக்கையை தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ஜான் பிரிட்டாஸ் எம்.பி., மேலும் கூறுகையில்,”நாட்டில் பட்டியல் மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொரு ளாதார ரீதியாகப் பின்தங்கிய வகுப் பினர் மற்றும் சீர்மரபினர் மாணவர் களுக்காக ஒதுக்கப்பட்ட ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் மதிப்பு கொண்ட கல்வி உதவித்தொகை செலவிடப்படாமல் உள்ளன. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி கல்வி உதவித்தொகை பிரிவில் 2021-22ஆம் ஆண்டு ரூ. 6,220.62 கோடி ஒதுக்கப்பட்டன. ஆனால் வெறும் ரூ.4,446.24 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டன. அதே போல 2022-23இல் ரூ.8,165 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.6,372.38  கோடியும், 2023-24இல் ரூ.8,874.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.7,762.82 கோடியும், 2024-25இல்  ரூ.9,163.98 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டு ரூ.8,008.79 கோடியும்  செலவு செய்யப்பட்டுள்ளன. தலித், பழங்குடி மாணவர்கள் அதே நேரத்தில், கல்வி உதவித் தொகை பெறுபவர்களின் எண்ணி க்கையில் கவலையளிக்கும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 2020-21இல் உயர்நிலை (Pre-Matric) பள்ளிப்படிப்பு வரை (1 முதல் 10ஆம் வகுப்பு வரை) கல்வி உத வித்தொகை பெற்ற தலித், பழங்குடி மாணவர்களின் எண்ணி க்கை 31.22 லட்சம் ஆகும். ஆனால் 2024-25இல் இந்த எண்ணிக்கை 21.65 லட்சமாக குறைந்துள்ளது. அதே போல 2020-21இல் மேல்நிலை (Post-Matric) கல்வி உதவித்தொகையை 50.16 லட்சம் தலித், பழங்குடி மாணவர்கள் பெற்றனர். ஆனால் 2024-25இல் 48.04 லட்சமாக குறைந்துள்ளது.  2020-21இல் 54.95 லட்சம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் சீர்மரபின மாணவர்கள் கல்வி உதவித்தொகையை பெற்றனர். ஆனால் 2024-25இல் 20.61 லட்சம் என்ற அளவில் மிக மோசமான அளவில் சரிந்துள்ளது. இதே பிரிவின் மேல்நிலைக் கல்விக்காக 2020-21இல் 45.45 லட்சம் மாண வர்கள் கல்வி உதவித்தொகை பெற்றனர். ஆனால் 2024-25இல் 24.53 லட்சம் என்ற அளவில் பாதியாக குறைந்தது. குறிப்பாக, 2024-25ஆம் ஆண்டில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைக்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடு ரூ.14,164.42 கோடி ஆகும். ஆனால் செலவிடப்பட்டதோ வெறும் ரூ.8,679.02 கோடி மட்டுமே. ஒன்றிய அரசின் அறிக்கையின் மூலம் லட்சக்கணக்கான மாண வர்கள் கல்வி உதவித்தொகை பட்டி யலிலிருந்து மறைந்துவிட்டனர். விளிம்புநிலை மாணவர்களுக்கு இது வெறும் புள்ளிவிவரம் மட்டு மல்ல. இது இழந்த வாய்ப்பு” என ஜான் பிரிட்டாஸ் எம்.பி., கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.