tamilnadu

img

பாஜகவுக்கு அடியாளா மயிலாடுதுறை போலீஸ்?

விவசாயிகள் சங்கம்- சிபிஎம் தலைவர்கள் மீது தாக்குதல்

தரங்கம்பாடி, அக்.16-   மயிலாடுதுறையில் அமைதி யான முறையில் போராட்டம் நடத்த முயன்ற ஐக்கிய விவசாயிகள் முன் னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவர்களை  காவல்துறையினர் கண்மூடித்தன மாக தாக்கியதற்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடு துறை மாவட்டக்குழு கடும் கண்ட னத்தை தெரிவித்துள்ளது.       வேளாண் விரோதச் சட்டங்க ளுக்கு எதிராகவும்,மோடி அரசுக்கு எதிராகவும் நாடு முழுவதும் நாள் தோறும் போராட்டங்கள் தீவிர மடைந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநி லம் லக்கிம்பூரில் அமைதி வழியில் போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த சம்ப வத்தைக் கண்டித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, வேளாண்துறை அமைச்சர் நரேந்தி ரசிங் தோமர், உத்தரப்பிரதேச முதல் வர் யோகி ஆதித்யநாத், ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோரின் உருவபொம்மை களை எரிக்கும் போராட்டம் வெள்ளியன்று மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதற்கு  ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கி ணைப்பாளரும், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளருமான எஸ்.துரைராஜ் தலைமை வகித்தார். போராட்டம் நடத்துவதற்கு தயாராகி நீதி மன்ற சாலையிலிருந்து பட்டமங்க லத்தெரு வழியாக ஏராளமானோர் கண்டன முழக்கமிட்டவாறு கிட்டப்பா அங்காடி நோக்கி சென்ற னர். அப்போது போராட்டம் நடத்து வதற்கு முன்பாகவே மயிலாடு துறை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையிலான காவல்துறை யினர்   தலைவர்களை கொடூரமாக தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். துரைராஜ் படுகாயமடைந்து போராட்டக்களத்திலேயே மயக்க மடைந்து விழுந்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன், விவசாயிகள் சங்க மாவட் டத்தலைவர் டி.சிம்சன், ஒன்றியச் செயலாளர்கள் ஏ.ரவிச்சந்திரன், கே.பி.மார்க்ஸ், சி.விஜயகாந்த் உள்ளிட்டோரும் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகினர்.போராட்டத்தில் பங்கேற்ற அனை வரையும் கைது செய்து,பின்னர் விடுவித்தனர்.

சிறப்பு உதவி ஆய்வாளர் சேதுபதி அராஜகம்

காவல்துறைக்கும்  போராட்டக் காரர்களுக்கும் தள்ளுமுள்ளு துவங்குவதற்கு முன்பே சிபிஎம் நகரச்செயலாளர் டி.துரைக் கண்ணுவை சிறப்பு உதவி ஆய்வா ளர் சேதுபதி தாக்கி அவரது சட்டை யை கிழித்து போராட்டத்தை சீர் குலைக்கும் வேலையை செய்துள் ளார். காவல்துறையின் கடும் தாக்கு தலுக்குள்ளான எஸ்.துரைராஜ் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார்.                              

சிபிஎம் கடும் கண்டனம்  

கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை யில்,  மயிலாடுதுறை காவல்துறை பாஜகவின் அடியாளாக மாறியிருப் பது கண்டனத்திற்குரியது . அமை தியாக பேரணியாக வந்தவர்களை வழிமறித்து போராட்டம் துவங்கு வதற்கு முன்பே தாக்குதலில் ஈடு பட்ட காவல்துறையினரை வன்மை யாக கண்டிக்கிறோம்.  சிறப்பு உதவி ஆய்வாளர்  சேதுபதி திட்டமிட்டே தாக்குதலை துவக்கி இருக்கிறார். போராட்டத்திற்கு முன்பே பாஜக பிரமுகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய சேதுபதி உள்ளிட்ட காவலர்கள்தான் போராட்டக்குழு வினரை கடுமையாக தாக்கியி ருக்கின்றனர். மயிலாடுதுறை  பாஜகவுக்கு சேவகம் செய்வ தற்காகவே சேதுபதி இருக்கி றாரோ? என்ற சந்தேகம் எழுந்துள் ளது. தமிழக காவல்துறையும், தமி ழக அரசும் கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்ட மயிலாடு துறை காவல்துறை மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
 

;