tamilnadu

img

தமுஎகச பிரம்மாண்ட வளர்ச்சி பெறட்டும்

சென்னை, ஆக.9- தமுஎகச மாநில மாநாடு  வெற்றி பெற்று, பிரம்மாண்ட வளர்ச்சி பெறட்டும் என்று தமுஎகசவை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான என்.சங்கரய்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் 15ஆவது மாநில மாநாடு ஆகஸ்ட் 12-15 தேதி களில் கன்னியாகுமரி மாவட்  டம் மார்த்தாண்டம் நகரில் நடைபெற உள்ளது. ‘தனித்  துவம் நமது உரிமை; பன்  மைத்துவம் நமது வலிமை’ என்கிற முழக்கத்துடன் இந்த மாநாடு நடைபெறுகிறது. ஆக.8 அன்று குடியாத் தம் நகரிலிருந்து தேசியக் கொடி பயணம் புறப்பட்டது. மாநில துணைச் செயலாளர் கி.அன்பரசன் தலைமையில் வேலூர்-திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் சுரேந் திரன், ராணிப்பேட்டை மாவட்  டத் தலைவர் அந்திக்காற்று  பாலு, செயலாளர் ரஜினி காந்த் தலைமையிலான குழு வினர் கொடியை கொண்டு வந்தனர். ஆக.9 அன்று சென் னைக்கு வந்த கொடி பய ணக்குழுவிற்கு வரவேற்பு, மரியாதை செலுத்தும் நிகழ்வு குரோம்பேட்டையில் நடைபெற்றது. தேசியக் கொடியை பெற்று மரி யாதை செலுத்திய என்.சங்  கரய்யா, பயணத்தை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். அவ ரிடம் இருந்து தேசியக் கொடி யை மாநில பொறுப்புத் தலை  வர் மதுக்கூர் ராமலிங்கம்,  பொதுச் செயலாளர் ஆத வன் தீட்சண்யா, பொருளா ளர் சு.ராமச்சந்திரன் ஆகி யோர் பெற்றுக் கொண்ட னர்.

இந்நிகழ்வில் என்.சங்  கரய்யா பேசியது வருமாறு: 1974ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்  கம், தற்போது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கமாக மாறி யுள்ளது. அதனுடைய 15ஆவது மாநாடு மார்த்  தாண்டத்தில் நடைபெறு வதை அறிந்து பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த  மாநாட்டில் சுமார் 600 பிரதி நிதிகள் பங்கேற்கிறார்கள் என்பதை அறிந்து பெரிதும் மகிழ்கிறேன். தமிழ்நாட்டில் ஜனநாய கத்திற்கும், முற்போக்கிற் கும், சுதந்திரத்தை பலப்  படுத்துவதற்கும் மக்களிடத்  தில் உணர்வை ஏற்படுத்துவ தற்கும் தமுஎகச பணிபுரிகி றது. சங்கத்தில் உள்ளவர்  களுக்கு தமிழ் இலக்கி யத்தில் பயிற்சி அளியுங்கள். அவர்கள், சிறந்த தமிழ்  இலக்கியங்களை மேற்கோள் காட்டி சொற்பொழிவு ஆற்று பவர்களாக திகழ வேண்டும். தமிழ் இலக்கியத்தில் உள்ள  சிறப்புகளை பற்றி கட்டுரை கள் எழுத வேண்டும். தோழர் ஜீவாவால் தொடங்கப்பட்ட கலை இலக்  கிய பெருமன்றத்தோடு ஒன் றிணைந்து செயல்பட வேண்  டும். அதுபோன்று இதர  சகோதரத்துவ, இதே நோக்  கங்களைக் கொண்ட  அனைத்து வெகுஜன  இலக்கிய அமைப்புகளுடன் சேர்ந்து இந்த லட்சியத்திற் காக பாடுபட வேண்டும்.

இந்தியாவின் இதர மாநி லங்களில் உள்ள முற் போக்கு, எழுத்தாளர், கலை ஞர் சங்கங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி, அகில இந்திய பெரும் இயக்கமாக உரு வாக்க வேண்டும். 1936இல் இந்திய முற்போக்கு எழுத்  தாளர் சங்கம் பிரம்மாண்ட மாக தொடங்கப்பட்டது. அதேபோன்று புத்துயிர் பெற்று அந்த அமைப்பை வளர்க்க வேண்டும். மாநாட்டில் சிறப்பான முறையில் அனைத்துத் துறைகள் பற்றியும் விவா திக்க வேண்டும். இலக்கி யம், இயல், இசை, நாடகம், சிறுகதைகள், நவீனம் போன்றவற்றை உருவாக்க உறுப்பினர்களுக்கு ஊக்க மும் ஆக்கமும் அளிக்க வேண்டும். மாநாடு வெற்றி பெற்று எழுத்தாளர் சங்கம் பிரம்மாண்ட வளர்ச்சி பெற  வேண்டும் என்ற எனது  மனப்பூர்வமான ஆவலை யும், விருப்பத்தையும் தெரி வித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் பாராட்டுக் கள், வாழ்த்துக்கள். மாநாட்டில் பங்கேற்கும் யூசிப் தாரிகாமிக்கும், பிற மாநிலங்களில் இருந்து பங்கேற்போருக்கும் வாழ்த்துக்களை தெரி வியுங்கள்.  இவ்வாறு அவர் கூறி னார். இந்நிகழ்வில் 1974ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி தமுஎச அமைப்பை என்.சங்கரய்யா தொடங்கி வைத்த  கூட்டத்தில் கலந்து கொண்ட எஸ்.ஏ. பெருமாள், வேலராமமூர்த்தி ஆகி யோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

;