tamilnadu

img

தீக்கதிர் அலுவலகத்தில் மே தின கொடியேற்ற நிகழ்ச்சி...  

மதுரை 
உழைக்கும் மக்களின் தினமான மே தினத்தை முன்னிட்டு மதுரை தீக்கதிர் அலுவலகத்தில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மதுரை தீக்கதிர்  அலுவலகத்தின் பாதுகாவலரும், மூத்த தோழருமான கணேசன் தலைமை தாங்கினார். விளம்பர பொறுப்பாளர்  தோழர் சங்கர நயினார் கட்சிக் கொடியை ஏற்றினார். மூத்த தோழரும், தீக்கதிர் ஆசியார் குழு ஆலோசனையாளருமான தோழர் பரமேஸ்வரனும்,  தீக்கதிர் ஆசிரியரும்  சிபிஎம் செயற்குழு உறுப்பினருமான தோழர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தீக்கதிர் பொறுப்பாசிரியரும், மாநிலக்குழு உறுப்பினர் எஸ். ராஜேந்திரன், தீக்கதிர் மதுரை பாதிப்பு பொது மேலாளர் ராஜ்மோகன், விளம்பர மேலாளர் உமாபதி உள்ளிட்ட தீக்கதிர் ஊழியர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.      

;