tamilnadu

img

சாத்தூர் எச்.ஐ.வி தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு இல்லை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று ரத்தம் செலுத்தப்பட்டது. இதை அடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அப்பெண்ணுக்கு கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது.


இந்நிலையில் குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருக்கிறதா என்பது 45 நாட்களுக்கு பிறகே கண்டறிய முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை அடுத்து, கடந்த 4-ஆம் தேதி குழந்தைக்கு முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டது. அதற்கான முடிவுகள் தற்போது தெரியவந்துள்ளது. 


இந்த முதற்கட்ட பரிசோதனையில் குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு இல்லை என்றும், குழந்தையின் உடல் எடை தற்போது 3.2 கிலோவாக அதிகரித்துள்ளது என்றும் மதுரை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளர். இதை தொடர்ந்து, குழந்தைக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை 6 மாதங்களுக்கு பிறகும், மூன்றாம் கட்ட பரிசோதனை 18 மாதங்களுக்கு பிறகும் நடத்தப்படும் என கூறப்படுகிறது.


;