tamilnadu

திண்டுக்கல் - மதுரையில் மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்கிடுக!

தலைமைச் செயலாளருக்கு  மார்க்சிஸ்ட் கட்சி கடிதம்

சென்னை,செப்.16- திண்டுக்கல், மதுரை வருவாய்  கோட்டங்களில் கடந்த 25 ஆண்டு களுக்கும் மேலாக மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு இனச்சான்று வழங்கிட அதிகாரி கள் மறுத்து வருகின்றனர். இந்த  மக்களுக்கு உடனடியாக இனச் சான்றிதழ் வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செப்டம்பர் 15 அன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாள ருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.அவர் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:

மலைவேடன்  என்கிற சாதி  (பழங்குடியினர் இனம்) தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு சட்டம், (Scheduled Castes and Scheduled Tribes order (Amendment) Act, 1976 (No. 108 of 1976)  இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு  27.07.1977 முதல் இந்திய ஜனாதிபதி யின் அறிவிக்கை (Notification) மூலமாக தமிழ்நாடு முழுவதும் மலைவேடன் இனம் வசிப்பதாக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. “Malaivedan Community has been specifidd as Scheduled Tribes throughout the Tamil Nadu State”.  தமிழகத்தில் அரசிதழ் எண் : 1773, தேதி : 23.06.1984-ல் வரிசை எண்.22-ல் மலைவேடன் பழங்குடியினர் இனம் வசிப்பதாக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட மதுரை மாவட்ட மாக இருந்த காலத்தில் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட திண்டுக் கல் மற்றும் பழனி வருவாய் கோட்ட ங்களில் வசித்து வந்த மலைவேடன் இன பழங்குடியின மக்களுக்கு இனச் சான்று வழங்கி வந்துள்ளனர். கடந்த 1984 ஆம் ஆண்டு திண்டுக் கல் மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு, 1989 ஆம் வருடத்திற்கு முன்னர் வட்டாட்சியராலும் 1989  ஆம் ஆண்டிற்கு பிறகு வருவாய் கோட்டாட்சியராலும்  மலைவேடன் (ST) இனச்சான்று வழங்கப்பட்டு வந்தன. திண்டுக்கல் மாவட்ட த்தில் உள்ள பழனி வருவாய் கோட்ட த்தில் வசிக்கும் மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் இன்றைக்கும் வழங்கப்பட்டு வருகிறது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். 1992-க்குப் பிறகு சுமார் 25 ஆண்டு காலமாகவே திண்டுக்கல் வருவாய் கோட்டத்தில் வசிக்கும் மலைவேடன் பழங்குடியின மக்க ளுக்கு இனச்சான்று வழங்கிட மறுத்து வருகின்றனர்.

 கடந்த 25  ஆண்டுகளாக மலைவேடன் இனச்சான்று வழங்க மறுத்ததுடன் அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு, ஒரு தலை முறையினருக்கே மறுக்கப் பட்டுள்ளது. திண்டுக்கல் வருவாய் கோட்டத்தில் மட்டுமே இத்தகைய மோசமான நடவடிக்கை தொடர் கிறது.   மதுரை வருவாய் கோட்டத்தில் துவரிமான், கோட்டைமேடு, மண்ணாடிமங்கலம், கட்டக்குளம், அச்சம்பத்து, விராட்டிபத்து, அலங்காநல்லூர், வெளிச்சநத்தம் உட்பட சுமார் 11 கிராமங்களில் 8  ஆயிரம் மலைவேடன் இன மக்க ளும், திருமங்கலம் வருவாய் கோட்டத்தில், மாடக்குளம், அவனி யாபுரம் மற்றும் வேடர்புளி யன்குளம் ஆகிய கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் மக்களும் வசித்து  வருகிறார்கள்.  இம்மக்களுக்கு மலைவேடன் இனச்சான்றிதழ் வழங்குவதில் காலதாமதமும், சில  கிராமங்களில் மலைவேடன் இனச்சான்றிதழ் கோரிய மனுக் கள் முறைப்படி விசாரிக்காமல் மற்றும் இவர்கள் கொடுத்த ஆவ ணங்கள் எதையும் பரிசீலிக்காமல் அம்மனுக்கள் தள்ளுபடி செய்துள்ளதாக அறிகிறேன்.  எனவே, மேற்குறிப்பிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், ஏற்கனவே இனச்சான்று கோரி விண்ணப்பித்துள்ள திண்டுக்கல் வருவாய் கோட்டத்தில் வசிக்கும் மலைவேடன் இனமக்களுக்கு  இனச் சான்று வழங்கிடவும், அதேபோல், மதுரை மாவட்டத்தில் மலைவேடன் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்தி இனச்சான்றிதழ் வழங்கிட தாங்கள் ஆவன செய்து நட வடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.

;