tamilnadu

img

பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்ய சட்டமியற்றுக!

மதுரையில் கே.பாலகிருஷ்ணன்  வலியுறுத்தல்

மதுரை, செப்.17- தந்தை பெரியாரின் 143-ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு செப்டம்பர் 17 வெள்ளியன்று மதுரை அவனி யாபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார்.  இந்நிகழ்வில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநகர் மாவட்டச் செய லாளர் இரா.விஜயராஜன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய கே.பால கிருஷ்ணன் கூறுகையில், தந்தை பெரியாரின் பணிகளும் சாதனைகளும் இருண்டு கிடந்த தமிழகத்திற்கு ஒளி விளக்காகப் பயன்பட்டு வருகிறது.

சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களை இந்த மண்ணில் விதைத்தவர். சாதிய  ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியவர். கம்யூ னிஸ்ட் தலைவர்கள் சிங்காரவேலர், ஜீவானந்தம் ஆகி யோருடன் இணைந்து பகுத்தறிவுப் பிரச்சாரத்தோடு பொதுவுடைமை கருத்துக்களையும் இந்த மண்ணில் விதைத்திட்டவர். சமத்துவம், சமூக நீதிக்காகப் போராடிய பெரியார், வர்ணாசிரமக் கொள்கைகளுக்கு எதிராக முழக்கமிட்டார்.  நால்வர்ண, வர்ணாசிரமக் கொள்கைகளை திணிக்க பாஜக முயல்கிறது. இந்தத்  தருணத்தில் பெரியாரின் சிந்தனைகளை தமிழகத்தில் இன்னும் வேகமாக எடுத்துச் செல்ல வேண்டும். பெரியார் பிறந்த இந்த மண்ணில் அனைத்துச் சாதியினரையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அர்ச்சகராக்கியுள்ளது வரவேற்கத்தக்கது. கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பே  கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு அனைத்துச் சாதிகளையும் சேர்ந்த 350 பேரை அர்ச்சகராக்கி இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது. மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வதற்கான சட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதே போல் முதல்வர் மு.க. ஸ்டாலின் , தமிழகத்திலும் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வதற்காக சட்டமியற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

;