tamilnadu

img

மோடியின் வீழ்ச்சியை முன்னறிவித்த விவசாயிகள் போராட்டம்

திருவனந்தபுரம், நவ.27- வர்க்க ஒற்றுமையை வகுப்பு வாதத்தால் பிரிக்க முடியாது என்ள பதை விவசாயிகள் போராட்டம் நிரூ பித்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக் குழு உறுப்பினர் கொடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஓராண்டாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஒரு மைப்பாடு தெரிவித்து சம்யுக்தா கர்ஷக சமிதி நடத்திய ராஜ்பவன் அணிவகுப்பை அவர் வெள்ளியன்று (நவ.26) தொடங்கி வைத்தார்.  அப்போது பேசிய கொடியேரி பாலகிருஷ்ணன் கூறியதாவது, சுதந்திர இந்தியா கண்டிராத மாபெரும் வர்க்கப் போராட்டம்; விவ சாயிகளின் போராட்டம் என்றார். ஒன்றிணைந்த போராட்டத்தை வகுப்புவாதத்தால் உடைக்க ஆர்எஸ்எஸ் முயற்சித்தது. மோடியின் வீழ்ச்சிக்கு விவ சாயிகள் போராட்டம் தொடக்கம் குறித்தது. நிலம் மற்றும் விளை பொருட்கள் மீது விவசாயிகளுக்கு உரிமை இருக்க வேண்டும்.

எல்லா வற்றையும் கார்ப்பரேட் நிறுவ னங்களிடம் ஒப்படைத்தால் விவ சாயிகள் அடிமைகளாகி விடு வார்கள். அதற்குதான் ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது. ஆனால் வெற்றி பெறாது. விவசாயிகள், தொழிலா ளர்களின் வர்க்க ஒற்றுமையால் போராட்டம் வெற்றி பெற்றது. இது புதிய இந்தியாவை உருவாக்க உத வும். விளைபொருட்களுக்கு போதிய ஆதரவு விலை அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என விவசாயி களின் அமைப்புகள் அறிவித்துள் ளன. கேரளாவில் 16 வகையான காய்கறிகளுக்கு அரசு ஆதரவு விலையை அறிமுகப்படுத்தியுள் ளது. நாட்டிலேயே கேரளாவில்தான் நெல்லுக்கு அதிக ஆதரவு விலை உள்ளது. இந்த மாதிரி நாடு முழு வதும் தேவையாக உள்ளது. கேரளாவில் வகுப்புவாத பிளவு களை உருவாக்கும் முயற்சிகளை ஆர்எஸ்எஸ்-சும், எஸ்டிபிஐயும் வலுப்படுத்தி வருகின்றன. இது கேரளாவை களங்கப்படுத்தும் சதி. மதச்சார்பின்மையை நிலைநிறுத்தி இந்த நடவடிக்கையை எதிர்க்க வேண்டும் என்றார்.

;