tamilnadu

img

உள்ளூர் வேலை வாய்ப்பில் 25% சம்பளம் மாநில அரசு வழங்கும்

திருவனந்தபுரம், மார்ச் 31- வளர்ச்சியை நோக்கி முன்னேறி வரும்  கேரளத்தின் தொழில்துறைக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் தொழில்- வணிகக் கொள்கைக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கொள்  கையின்படி, 50 சதவீதத்துக்கும் அதிக மான உள்ளூர்த் தொழிலாளர்களை நிரந்த ரமாகப் பணியமர்த்தும் பெரிய நிறுவ னங்களில் தொழிலாளர்களின் மாத ஊதி யத்தில் 25 சதவீதத்தை (ரூ.5,000 வரை) அரசு வழங்கும் எனத் தொழில் துறை அமைச்சர் பி.ராஜீவ் தெரிவித்தார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

புதிய சவால்களை ஏற்றுக்கொண்டு அதிகபட்ச முதலீட்டை ஈர்ப்பதோடு அதிக  தொழில்கள் மற்றும் வேலை வாய்ப்பு களை உருவாக்குவதே தொழில்-‘வணி கக் கொள்கையின் நோக்கம். தொழில் நிறு வனங்களுக்கு சலுகை அளிக்கத் திட்ட மிட்டுள்ளோம். நிகழாண்டை முதலீட்டு ஆண்டாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம்.  செயற்கை நுண்ணறிவு, டேட்டா மைனிங் மற்றும் பகுப்பாய்வு முயற்சி களைப் பயன்படுத்தி கட்டுமான நடவ டிக்கைகளுக்கான செலவில் 20 சத வீதத்தை (ரூ. 25 லட்சம் வரை) அரசாங்கம் திருப்பிச் செலுத்தும். சிறு-குறு-நடுத்தர தொழில்களுக்கு (எம்எஸ்எம்இ) ஐந்தாண்டுகளுக்கு மின்  சார வரியிலிருந்து விலக்கு, பெண்  களுக்கு, எஸ் சி-எஸ் டி தொழில்முனைவோ ருக்கு முத்திரை வரி, பதிவுக் கட்டணத்தி லிருந்து விலக்கு அளிக்கப்படும். செயற்கை நுண்ணறிவு, ரோபாட் டிக்ஸ், மின்சார வாகனங்கள், மருத்துவ உபகரணங்கள், கடல்சார், நானோ தொழில்நுட்பம், சில்லறை விற்பனை, சுற்றுலா, உயர் தொழில்நுட்ப விவசா யம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட தோட்  டக்கலை உள்ளிட்ட 22 முன்னுரிமை பகுதி களைக் கண்டறிந்து தொழில்-வணிகக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக  விண்வெளிப் பாதுகாப்பு தொழில்நுட்ப மான ஹப்பகான் விண்வெளி பூங்கா  அமைக்கப்படும். உலகத்தரம் வாய்ந்த  பயோ பிரிண்டிங் லேப் மற்றும் 3-டி பிரிண்டிங் படிப்புகள் தொடங்கப்படும்.பாரம்பரிய தொழில்கள் நவீனமயமாக் கப்படும். கேரளத்தின் தயாரிப்புகளை சந் தைப்படுத்துவதை எளிதாக்குவது மற்றும்  வெளிநாட்டு சந்தைகளைக் கண்டறிய உத வுவதும் கொள்கையின் நோக்கமாகும். தொழில்-வணிகக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முதன்மை செயலாளர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

சலுகைகள்

*    எம்எஸ்எம்இ-களுக்கு நான்கு சதவீத  வட்டியில் ரூ.10 லட்சம்கடன் *    குறுந்தொழில்களுக்கு ரூ.40 லட்சம்  வரை மூலதன மானியம். சிறு நிறு வனங்களுக்கு ரூ.1 கோடி. நடுத்தர  நிறுவனங்களுக்கு ரூ.2 கோடி மானி யம்.

*    பெரிய மற்றும் மெகா நிறுவனங்க ளுக்கு நிலையான மூலதன முதலீட்  டில் 10 சதவீதம் (ரூ.10 கோடி வரை)  மானியம். *    திருநங்கைகளுக்கு நிரந்தர வேலை வழங்கினால், அவருக்கான சம்ப ளத்தில் ரூ.7500-ஐ அரசு வழங்கும்.

*    தனியார் தொழிற்பேட்டைகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ.3  கோடி அரசு வழங்கும்.

*    காப்புரிமை, பதிப்புரிமை, வர்த்தக முத்திரை மற்றும் ஜி-1 பதிவுக்கான செலவில் 50 சதவீதத்தை மாநில அரசே ஏற்கும்.

*    மாநிலத்தில் உள்ள ஸ்டார்ட்அப் நிறு வனங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.

*    மேட் இன் கேரளா சான்றிதழுக்கான தொகையில் 50 சதவீதம் திருப்பித் தரப்படும்.

தொழில்-வணிகக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முதன்மை செயலாளர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.


 

;