tamilnadu

img

ஜன.27 அரசு ஊழியர்கள் போராட்ட ஆயத்த மாநாடு.... மு. க. ஸ்டாலின், கே. பாலகிருஷ்ணன், தலைவர்கள் பங்கேற்பு.....

மதுரை:
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி  ஜன. 27ஆம்தேதி  மதுரையில் போராட்ட ஆயத்த மாநாட்டை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நடத்துகிறது.
இந்த மாநாடு குறித்து ஞாயிறன்று மாநில பொதுச் செயலாளர் ஆ. செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது; 

அரசு ஊழியர்கள், ஆசிரியர் களை தமிழக அரசு  வன்மத்தோடு பார்க்கிறது. இந்த அணுகுமுறை தவறானது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், வருவாய்துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார், பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன், பணியாளர் நிர்வாக சீர்திருத்ததுறை அமைச்சர்ஜெயக்குமார் ஆகியோரின் கவனத்திற்கு தங்களின் கோரிக்கை களை மீண்டும் கவனப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்ஜனவரி 27-ஆம் தேதி மாநில அளவிலான போராட்ட ஆயத்த மாநாட்டை மதுரையில் நடத்துகிறது. 

இந்த மாநாட்டில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் மாநில தலைவர் கே. எஸ்.அழகிரி,  சிபிஐ மத்திய குழு உறுப்பினர் பி. சேதுராமன், தமிழ்நாடு அரசுஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு. அன்பரசு, பொதுச் செயலாளர் ஆ. செல்வம், ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பா ளர்கள், துறைவாரி சங்க நிர்வாகிகள்  பங்கேற்று கருத்துரை ஆற்று கின்றனர்.நான்கரை லட்சம் காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு, வருவாய் கிராம  உதவியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் என 3. 50 லட்சம் பேர் பணியாற்றுகின்றார்கள். இவர்களுக்கு காலமுறை ஊதியம்வழங்க வேண்டும், இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் ஆதிசேஷையா குழுவின் பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் .ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட குற்ற குறிப்பனை ஆணைகளை ரத்து செய்ய வேண்டும் . முன்னாள் மாநிலத் தலைவர் மு. சுப்பிரமணியம் உள்ளிட்ட  பலருக்கு  பணி ஓய்வின் போது வழங்கப்பட்ட தற்காலிக பணி நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறுகிறது.  

இதில் தமிழகம் முழுவதுமிருந்து  1 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். 2011 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு எங்களை அழைத்து பேசவில்லை. பலமுறை  துறை சார்ந்த அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தியபோது, முதல்வரிடம் பேசி கோரிக்கைகளுக்கு தீர்காண்பதாக கூறினர். இதுவரை  எதுவும் நடைபெறவில்லை இந்த சூழலில் தான்போராட்ட ஆயத்த மாநாடு நடத்தவேண்டிய கட்டயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். மாநட்டிற்கு பின்னும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பிப்ரவரி  2 ஆம்தேதி முதல் தமிழக முதல்வர் அழைத்து பேசும்வரை தொடர் மறியல் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்றார் .பேட்டியின் போது மதுரை மாவட்டத் தலைவர் ஜெ. மூர்த்தி, மாவட்டச்   செயலாளர் க. நீதிராஜா,பொருளாளர் ராம்தாஸ் உள்ளிட்டமாவட்ட நிர்வாகிகள் உடனிருந்த னர்.
 

;