tamilnadu

img

தேர்தல் பத்திரங்கள் மூலம் பகல் கொள்ளை பாஜக ஊழலைப் பற்றிப் பேச அருகதை இல்லை

தேர்தல் பத்திரங்கள் மூலம் பகல் கொள்ளை பாஜக ஊழலைப் பற்றிப் பேச அருகதை இல்லை 

பெ. சண்முகம் கடும் தாக்கு!  சென்னை, பிப். 20-  “நாடு தழுவிய அளவில் ஊழல் செய்து அதன் மூலம் வாழ்ந்து கொண்டி ருக்கும் பாஜகவுக்கு, ஊழலைப் பற்றிப் பேச  எந்த அருகதையும் இல்லை” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்  செயலாளர் தோழர் பெ. சண்முகம் சாடினார்.  சென்னைத் துறைமுகம் பகுதிக்குழு சார்பில் என்.எஸ்.சி. போஸ் சாலையில் வெள்ளியன்று (பிப். 20) நடைபெற்ற தேர்தல் நிதி வசூல் இயக்கத்தைத் தொடங்கி வைத்த பின்னர், அவர் செய்தியாளர்களி டம் பேசியதன் விபரம் வருமாறு:  மக்களிடமே நிதி; மக்களுக்காகவே பணி!  “மக்களுக்காகப் பணியாற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனது செயல்பாடுகளுக்கான நிதியை ஆண்டு தோறும் மக்களிடமிருந்தே பெறுகிறது. இந்தப் பாரம்பரியமான அணுகுமுறை யின்படி, தமிழ்நாடு முழுவதும் பல்லா யிரக்கணக்கான தோழர்கள் வீடு வீடாகச் சென்று சிறு வியாபாரிகளிடமும், பொது மக்களிடமும் நிதி திரட்டி வருகின்றனர். இன்று மத்திய சென்னை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான தோழர்கள் இந்த வெகுஜன வசூல் இயக்கத்தில் ஈடுபட்டுள்ள னர். எந்தப் பகுதி மக்களுக்காகப் போராடு கிறோமோ, அவர்களிடமே நிதியைப் பெற்றுச் செயல்படுவதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் தனிச்சிறப்பு” என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.  பாஜகவின் ஊழல் முகம்  பாஜகவின் விமர்சனங்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “’பிஎம்  கேர்ஸ் ஃபண்ட்’ (PM Cares Fund) என்ற பெயரில் ஒன்றிய அரசின் இலச்சினை யைப் பயன்படுத்தி வசூலித்த பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு இன்று வரை கணக்கு கேட்டால் தர முடியாது என்கிறார்கள்.  பகிரங்கமாக இவ்வளவு பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ள ஒரு கட்சியின் தலைவர், தமிழ்நாட்டைப் பற்றி விமர் சிக்கத் தகுதியற்றவர். தேர்தல் பத்திரங்கள் மூலம் 6,000 கோடி ரூபாய்க்கும் மேல் கொள்ளையடித்த பாஜகவின் ஊழல் முகம் இன்று உச்ச நீதிமன்றத்தால் அம்பலப்பட்டு நிற்கிறது” என்றார்.  வலுப்பெறும் மதச்சார்பற்ற கூட்டணி  கூட்டணி குறித்த விவாதங்களுக்குப் பதிலளித்த பெ. சண்முகம், “காங்கிரஸ் கட்சியில் நிலவும் சில கருத்து வேறுபாடு களை அக்கட்சியின் தலைமை சரி செய்யும் என நம்புகிறோம்.  இதனால் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. பிப்ரவரி 19 அன்று தேமுதிக இந்த அணியில் இணைந்துள்ளது, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை மேலும் வலுப் படுத்தியுள்ளது. மற்றவர்கள் எதிர்பார்ப்ப தைப் போல மதச்சார்பற்ற கூட்டணி பலவீனமடையாது; அது இன்னும் வலிமையுடனேயே செயல்படுகிறது” என்று உறுதியாகத் தெரிவித்தார். வாச்சாத்தி: 30 ஆண்டு காலப் போராட்ட வரலாறு வாச்சாத்தி வன்கொடுமை வழக்கைக் குறிப்பிட்ட அவர், “வாச்சாத்தி சம்பவம் நடந்தபோது அதிமுக அரசு அதிகாரத்தில் இருந்தது. வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரடியாக அந்த வன்கொடுமையில் ஈடுபட்டார்கள். அவர்களுக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்சிஸ்ட் கட்சி சட்டப் போராட்டத்தை நடத்தியது. மாநிலம் முழுவதும் உண்டியல் ஏந்தி நிதி வசூலித்து அந்த வழக்கை நடத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டியது மார்க்சிஸ்ட் கட்சிதான்” என்று நினைவு கூர்ந்தார். இந்தத் தேர்தல் நிதி வசூல் இயக்கத்தின் போது ஒரே நாளில் ரூ. 3,00,300 நிதி வசூல் செய்யப்பட்டது. துறைமுகம் பகுதிச் செயலாளர் ஆர். குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி. திருவேட்டை, ஆர். முரளி, எஸ்.வி. வேணுகோபாலன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். அருள் குமார், மூத்த தலைவர் எம்.வி. கிருஷ்ணன் உள்ளிட்ட திரளான தோழர்கள் பங்கேற்றனர்.