மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆங்கில வார இதழான ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதமாக மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்த இயக்கத்தின் வாயிலாக முதற்கட்டமாக 1048 சாந்தாக்கள் சேகரிக்கப்பட்டன. இதற்கான தொகை மற்றும் பட்டியலை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் சந்தா சேகரிப்புக்குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ.இ.முத்துக்குமார் வழங்கினார். இந்நிகழ்வின்போது மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், பெ.சண்முகம், ஏ.லாசர், கே.கனகராஜ், என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.பத்ரி, கே.சுவாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.