tamilnadu

img

மருத்துவம் - சாலை வசதியின்றி தனித்தீவான மலையூர் கிராம மக்கள்

75 ஆண்டு கால அவலம்

கர்ப்பிணிப் பெண்களை டோலி கட்டி தூக்கிச்செல்லும் நிலை

திண்டுக்கல் மாவட்டத்தில் மரு த்துவம் மற்றும் சாலை வச தியின்றி தனித் தீவாக உள் ளது மலையூர் கிராமம். இக்கிராம மக்கள் இறந்தவர்களை டோலி கட்டித்தான் தூக்கிச்செல்கின்றனர்.   75  ஆண்டுகளாக இந்த நிலை உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சின்னமலையூர்,  பெரிய மலையூர், வலசை, பள்ளத்துக் கால்வாய் போன்ற மலை கிராமங்கள்  உள்ளன.   5 ஆயிரம் பேர் வசிக்கக் கூடிய இந்த கிராம மக்களுக்கு இத்தனை ஆண்டுகளாக நல்ல சாலை வசதி இல்லை. இதன் காரணமாக இந்த கிராம மக்களுக்கு முறையான மருத்துவ வசதி   உள்ளிட்ட எந்த  வசதியும் கிடைக்கவில்லை. மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும் என்றால் 30 கி.மீ தூரத்தில் உள்ள நத்தம் வர வேண்டும். அல்லது மதுரை செல்ல வேண்டும். இந்த கிராமங்களில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களைக் கூட  நத்தம் மருத்துவமனைக்கு டோலி  கட்டித்தான் தூக்கிச்  செல்கின்ற னர். நத்தம் அல்லது மதுரை மருத்துவ மனைகளுக்கு  சிகிச்சைக்காக டோலி கட்டி தூக்கிச்சென்று குட்டுப் பட்டி, அல்லது அய்யனார் புரத்தி லிருந்து வாகன ஏற்பாடு செய்து அழைத்துச் செல்கிறார்கள். சில சமயம் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த வர்களை மீண்டும் 7 முதல் 10 கி.மீ  உயரமான மலையில் தங்கள் கிரா மத்திற்கு எடுத்துச்சென்று அடக்கம் செய்கிறார்கள்.

அப்படித்தான் கடந்த புதனன்று வலசை கிராமத்தைச் சேர்ந்த  செல்வராஜ் என்பவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை கிராம மக்கள் டோலி கட்டி  நத்தம் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று பிறகு மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வ ராஜ் மரணமடைந்தார். இதனையடுத்து அவரது உடலை பெற்றுக்கொண்டு மீண்டும் 10 கி.மீ தூரத்திற்கு உடலை தூக்கி வந்து அடக்கம் செய்தனர். இந்த 4 கிராமங்களுக்கும் சேர்த்து  ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தால் கூட இந்த கிராம மக்கள் உரிய மருத்துவ சிகிச்சை பெற்று  விடுவார்கள். ஆனால் அடர்ந்த மலைப் பகுதியில் 10 கி.மீ வரை அந்த கரடு முரடான சாலையில் ஒரு செவிலி யரோ, அல்லது டாக்டரோ தினசரி நடந்து செல்வது சாத்தியமற்றது.   முறையான சாலை வசதி அமைத்துக் கொடுத்தால்தான் இவர்களால் செல்ல முடியும்.

பள்ளிக்கு 10 கி.மீ. நடக்கும் மாணவர்கள்

அதிமுக ஆட்சியில் கூட இந்த கிராமங்களில் ஏதாவது ஒரு கிராமத்திற்கு அம்மா மினி கிளினிக் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் அமைக்கப்படவில்லை. இப்போது திமுக ஆட்சியில் வீடு தேடி வரும் மருத்துவம் என்று ஒரு  திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த  திட்டத்தின்படி மருத்து வர்களோ,  செவிலியர்களோ இங்கு இதுவரை வரவில்லை.  சாலை வசதி இல்லாததால் நகரங்களில் இருந்து துண்டிக்கப்பட்ட ஒரு தனித்தீவு போல இந்த கிராமங்கள் உள்ளன.  இந்த மலை வாழ் பள்ளி மாணவ, மாணவியர்கள் தினசரி 10 கி.மீ தூரம் வரை நடந்து அய்யனார் புரத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு வரு கிறார்கள். அதிகாலை 7 மணிக்கு புறப் பட்டால் தான் 9 மணிக்கு பள்ளிக்கு வர முடியும். மீண்டும் 4 மணிக்கு பள்ளி முடிந்தவுடன் மாலை 6 மணிக்கு வீடு  திரும்புகிறார்கள். பொதுவாக மலைப் பகுதியில் 3 மணி ஆனாலே இருட்டி விடும். இந்த இருட்டுக்குள் பாம்பு களின் தொல்லையும், காட்டு மாடுகளின் தொல்லைகளையும் இந்த மாணவ, மாணவியர்கள் சமாளித்து வர வேண்டியுள்ளது. சின்ன மலையூர் மற்றும் வலசை கிராமங்களில் ஆரம்பப் பள்ளிகள் உள்ளன. பெரிய மலையூர் கிராம த்தில் உள்ள ஆரம்பப்பள்ளி  3 ஆண்டு களுக்கு முன்பு தான் 8 ஆம் வகுப்பு வரையுள்ள  நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த பள்ளி யை 10 ஆம் வகுப்பு வரை தரம்  உயர்த்தலாம். சாலை வசதி இல்லாத  காரணத்தால் இந்த மலை கிராம  மாணவ, மாணவியர்கள் தங்கள்  மேல்படிப்பை தொடர முடிய வில்லை. ஒவ்வொரு ஆண்டும் மாண வர்கள் இடைநின்றுவிடுகிறார்கள். இந்த கல்வி ஆண்டில் கூட 8 ஆம்  வகுப்போடு இடை நின்ற 5 மாண வர்களை 9 ஆம் வகுப்பில் சேர்க்க வலி யுறுத்தி ஆசிரியர்கள் அந்த மாண வர்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள்.  இடைநின்று இந்த கிராமங்களில் கல்லூரி படிப்பு படித்த மாணவர்கள் மிகவும் அரிது

அவதிப்படும் பள்ளி ஆசிரியர்கள்

தையில் பெரிய மலையூர் கிரா மத்தில் உள்ள நடுநிலைப்பள்ளிக்கு ஆசிரியர்கள் செங்குத்தாக உள்ள பாதையில் தான் இரு சக்கர வாக னத்தில் கடந்து வர வேண்டும். கர ணம் தப்பினால் மரணம் என்ற நிலை யில் ஆசிரியர்கள் வீர சாகசம் புரிந்து பள்ளிக்கு வர வேண்டியுள்ளது. இங்குள்ள ஆரம்பப்பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வாரத்தில் சில நாட்கள் மட்டுமே வருகிறார்கள். பெரும் பாலும் இங்குள்ள  பள்ளிக்கு ஆசிரி யர்கள் வருவதற்கு விரும்புவ தில்லை. அதற்கு சாலை வசதி முக்கிய காரணம். இந்த கிராம பள்ளிக்கூடம் அதிகாரிகள் எந்த ஆசிரியரையாவது  பழிவாங்கவோ, தண்டனை தரவோ நினைத்தால் இந்த பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்வார்கள். ஆசிரியர்கள் மட்டு மல்ல கிராம செவிலியர்கள், கூட  இங்கு வருவதில்லை. இந்த ஊரில் ரேசன் கடையும் இல்லை. இம்மக்கள் அடிவாரத்தில் உள்ள ரேசன் கடைக் குச் சென்று தான் பொருட்கள் வாங்கி  வரவேண்டியுள்ளது.  குடிநீருக்கும் இக்கிராம மக்கள் பெரும் சிரமப்படுகிறார்கள். அருவி களுக்குச்சென்று தண்ணீர் பிடித்து  வருகிறார்கள். ஒவ்வொரு முறை யும் வாக்கு சேகரிக்க வருபவர்கள் இந்த ஊருக்கான சாலை வசதி, குடிநீர் வசதி செய்து தருவதாக சொல் லுவார்கள். ஆனால் செய்து தர மாட்டார்கள். 4 கிராமங்களுக்குமான ஒரு மேல்நிலைத்தொட்டி அமைத்து தருவதற்கான கோரிக்கை கோரிக்கையாகவே உள்ளது.  நஷ்டமடையும் விவசாயிகள் இந்த மலை கிராமங்களில் உள்ள  விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் மானாவாரியாக முந்திரியை பயிரிட்டுள் ளார்கள். அதே போல சீத்தாபழம் அதி கம் விளையும் பகுதியாக உள்ளது. இந்த மலை விளை பழங்களை விற்பனை செய்ய அடிவாரத்திற்கு கொண்டு வர வேண்டும். அதற்காக இப்பகுதியில் உள்ள கரடுமுரடான சரளைக்கற்கள் மிகுந்த மண் சாலை  தார்ச்சாலையாக மாற்றப்படவே ண்டும். முந்திரிக்காய்களை வாங்க பண்ருட்டியிலிருந்து வியாபாரிகள் வருவார்கள். மிக குறைந்த விலை க்கு வாங்கிச்செல்வார்கள். இதனால் இக்கிராம விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பெருத்த நஷ்டம் அடை கிறார்கள். 

வனத்துறையினரால் தொல்லை

இந்நிலையில் இந்த கிராமத்தில் வனத்துறை அதிகாரிகளின் தொல்லை மிக அதிகம். சின்ன செடி  வெட்டப்பட்டு கிடந்தால் கூட நத்தம் வனத்துறை அலுவலகத்திற்கு வரச் சொல்லி தொல்லை கொடுப்பார்கள். மலைக்கிராமங்களுக்கு சாலை வசதி யும், மருத்துவ வசதியும், பள்ளிக்கூட வசதியும் அரசும் மாவட்ட நிர்வாக மும் செய்து தர வேண்டும் என்று கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர் கள் வலியுறுத்தியுள்ளனர்.  

- இலமு, திண்டுக்கல்

 

;