tamilnadu

img

‘இடதுசாரிகள் இல்லாமல் இந்தியா இல்லை’

மதுரை, செப்.17- தோழர் என்.சங்கரய்யா நூற்றாண்டுவிழா கருத்தரங்கம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்டக்குழு சார்பில் மதுரையில் வியாழனன்று நடைபெற்றது.   நாட்டின் செல்வம் கொள்ளை போவதை தடுத்து நிறுத்த, மோடி அரசிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற தமிழக விவசாயிகள் அணி திரள வேண்டிய தருணம் இது . விவசாயிகள் எழுச்சியே நாட்டைக் காப்பாற்றும் என சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் கே.பாலகிருஷ்ணன், இவ்விழாவில் பங்கேற்றுப் பேசினார். “தோழர் என்.சங்கரய்யா வாழும் வரலாற்று நாயகர். சாதி, மதம், மொழி ஆகியவற்றிற்கு அப்பா ற்பட்டவர். சமூக நீதிக் கருத்துக்களை உயர்த்திப் பிடித்தவர். அவருடைய சிந்தனைகளையும் செயல்களையும் உள் வாங்கிக்கொண்டு அவரது வழியில் பயணிக்க உறுதியேற்போம்” என்றும் கே.பாலகிருஷ்ணன் கூறினார். “இன்றைக்கு எல்ஐசி, பிஎஸ்என்எல், ரயில்வே போன்ற பொதுத்துறை நிறுவனங்களை சூறையாடுகிறது பாஜக அரசு.

உதாரணத்திற்கு மதுரை ரயில் நிலையத்தை அதானியோ, அம்பா னியோ அல்லது வேறு ஏதாவது ஒரு கார்ப்பரேட் நிறுவனமோ ரூ.300 கோடி-க்கு குத்தகைக்கு எடுத்தால் அதன்மூலம் ரூ.3000 கோடி சம்பாதி ப்பார்கள். ரயில் நிலையத்தில் நுழைவதற்கு ரூ.200, நடைமேடைக் கட்டணம் ரூ.100, பயணக் கட்டணம் இரு மடங்கு என உயர்த்தப்படும். அதேபோல புதிய வேளாண் சட்டம் மூலம் விவசாயத்தை முற்றாக கார்ப்பரேட்டுகளின் கைகளில் கொடுத்து நாட்டை சூறையாடப் பார்க்கிறது ஒன்றிய அரசு. 11 மாதங்களாக தில்லி யில் போராடிவரும் விவசாயிகளின் கோரிக்கை களை ஏற்க மறுக்கிறது. தில்லி விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து செப்டம்பர் 27-ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தில் கிராமப்புற விவசாயிகளை பெருமளவில் பங்கேற் கச் செய்ய வேண்டும்.

அதன் முன்னேற்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக கிராமங்களில் விவசாயிகளின் கூட்டத்தை நடத்துங்கள்.” என்றும் கே.பாலகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  பொதுச் செயலாளர் பெ. சண்முகம் பேசுகையில், “தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வழிகாட்டும் ஒளிவிளக்காக  சங்கரய்யா திகழ்ந்து கொண்டிருக் கிறார். தமிழகத்தில் எந்தக் கிராமத்தில் விவ சாயிகள் போராட்டம் நடைபெற்றாலும் அந்தப் போராட்டம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.  கோடிக்கணக்கான விவசாயிகளை அவர் களது நிலங்களை புதிய வேளாண் சட்டம் மூலம் கார்ப்பரேட்டுகளுக்கு ஒப்படைக்க ஒன்றிய மோடி அரசு முயற்சித்து வருகிறது. புதுதில்லியில் விவசாயிகள் வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகரில் நடை பெற்ற பேரணியில் மட்டும் 10 லட்சம் பேர் பங்கே ற்றனர். இதை மோடி அரசு மறைக்க முயன்றது. ஆனால் உள்ளூர் தொலைக்காட்சிகள், பத்திரிகை கள் துவங்கி உலகம் முழுவதும் உள்ள தொலைக் காட்சிகளும் பத்திரிகைகளும் கோரிக்கையின் நியாயத்தை வெளிப்படுத்தின.

புதுதில்லி விவசாயிகள் போராட்டம் பெரும் நெருப்பாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது இவர் களது போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மும் கலந்து கொண்டது. தமிழக விவசாயிகள் பங்கேற்றது போராடும் விவசாயிகள் மத்தியில் தெம்பையும் எழுச்சியையும் ஏற்படுத்தி உள்ளது” என்றார். “ஒன்றிய அரசு அரிசி, பருப்பு, உருளைக் கிழங்கு, வெங்காயம் உட்பட ஏராளமான விளை பொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டி யலில் இருந்து எடுத்துவிட்டது. இது கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு சாதகமாக அமையும்.  அதானி அம்பானி பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் எத்த னை லட்சம் டன் பொருட்களை வேண்டுமானாலும் சேமித்து வைத்துக் கொள்ளலாம்; பின்னர் தங்க ளது நோக்கம் போல் விற்கலாம்; குறிப்பாக தமிழ கத்தில் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்ட சூழலில் கிலோ ரூ.250-க்கு விற்கப்பட்டது கார்ப்பரேட்டு களின் கையில் விவசாயம் சென்றுவிட்டால் இன்னும் விலை வாசி கடுமையாக உயரும்.” என்றும் பெ.சண்முகம் கூறினார்.

;