tamilnadu

சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியம்

புதுதில்லி, நவ.27- தென்னப்பிரிக்காவில் கண்டறி யப்பட்டுள்ள வைரஸ் குறித்து, இந்தியா வைச் சேர்ந்த மரபியல் மற்றும் ஒருங்கி ணைந்த உயிரியல் விஞ்ஞானி வினோத் ஸ்காரியா கூறுகையில், “ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, இந்தியாவில் மருத்துவ வசதிகள் சிறப்பாக உள்ளது. நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கம், பொது சுகாதார நட வடிக்கைகள், சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் மரபணு கண்காணிப்பு ஆகிய வற்றை மேம்படுத்த வேண்டும்.  மதிப்புமிக்க, பொன்னான நேரங் களை நாம் இழந்துவிடக்கூடாது. தகுதி யுள்ள அனைவருக்கும் குறைந்தபட்சம் இரண்டு டோஸ் தடுப்பூசி போடுவதற்கு நாங்கள் எங்களது பொன்னான நேரத்தை பயன்படுத்த வேண்டும்.

45 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனை வரும் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலமே கொரோனா தொற்றால் ஏற் படும் மரணத்தைக் குறைக்க முடியு மென்றார். மணிப்பால் மருத்துவமனையின் (எச்.சி.எம்.சி.டி) தொற்று நோய்கள் துறைத் தலைவர் அங்கிதா பைத்யா கூறுகையில், “வைரஸ்கள் உரு மாற்ற மடைகின்றன, அதைச் சமாளிப்பதற் கும் சிகிச்சையளிப்பதற்கும் சுகாதாரப் பாதுகாப்பையும் உள்கட்டமைப்பையும் வலுப்படுத்துவதும் தான் ஒரே வழி” என்றார்.

;