tamilnadu

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

மணிப்பூரில் நிலநடுக்கம்

இம்பால், அக்.16- வடகிழக்கு மாநிலங்க ளில் ஒன்றான மணிப்பூரில் சனிக்கிழமையன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவான இந்த நில நடுக்கம் காலை 7.16 மணிக்கு உணரப்பட்டது.  மணிப்பூரின் சுராசந்த்பூர் பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. வடகிழக்கு மாநி லங்களில் கடந்த சில வாரங்க ளாகவே அவ்வப்போது நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றது.

‘5 ஆண்டு கால ஆட்சி உறுதி’

மும்பை, அக்.16-  “சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றை பயன்படுத்தி பாஜக ஆளாத மாநிலங்களை ஒன்றிய அரசு சீர்குலைக்க முயற்சிக்கிறது. மகாராஷ்டிரா அரசு தனது 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்து மீண்டும் ஆட்சிக்கு வரும். பாதுகாப்புப் படை எல்லை அதிகார வரம்பு நீட்டிப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து அவருடைய எண்ணங்களை அறிய உள்ளேன்” என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார். 

சீமான் பொய்: வைகோ சாடல்

கோவில்பட்டி, அக்.16- சீமான் சொல்வதெல்லாம் பொய் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., சாடியுள்ளார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை சீமான் சந்தித்தது வெறும் 2 நிமிடம்தான்;  அவருடன் “ஆமைக்கறி சாப்பிட்டேன்” என்று  சீமான் சொல்வதெல்லாம் சுத்த பொய். விடுதலைப் புலிகள் சீமான் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என வைகோ கூறியுள்ளார்.  

சபரிமலை நடைதிறப்பு

பத்தனம்திட்டா, அக்.16-  சபரிமலை கோவில் நடை சனிக்கிழமையன்று திறக்கப்பட்டுள்ளது.  ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட பக்தர்களுக்கு 5 நாட்கள் (அக்., 17-21) அனுமதி உண்டு. கொரோனா தடுப்பூசி சான்றிதழ், ஆர்டிபிசிஆர் சான்றிதழ் கட்டாயம் ஆகும். ஐப்பசி மாத பூஜை நிறைவு பெற்ற பிறகு அக்.,21ஆம் தேதி கோவில் நடை சாத்தப்படும்.

 

பணியிட மாற்ற உத்தரவுகளை அதி காரிகள் ஒரு வாரத்துக்குள் நிறை வேற்ற வேண்டும் என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கற்றல் அடைவுத் தேர்வில் பங்கேற் கும் வகையில் 3, 5, 8, 10 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், புதிய நவீன எடை குறைந்த சமையல் எரிவாயு உருளை (காம்போசிட் சிலிண்டர்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கள் ஆடு, மாடுகளுக்கான சாக்லேட்டை கண்டுபிடித்துள்ளனர்.

தனியாக விண்வெளி மையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சீனா, அடுத்த கட்ட பணிகளுக்காக 3 வீரர் ்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கு முதல் பருவ பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை  அக்டோபர் 18 அன்று வெளியாகவுள்ளது.

நாட்டின் சிமெண்ட் உற்பத்தி, நடப்பு நிதியாண்டில் 12 சதவீதம் வரை அதிகரிக்கும் என, தர நிர்ணய அமைப் பான இக்ரா தெரிவித்துள்ளது.



 

;