tamilnadu

img

சேந்தாக்குடி ஊராட்சிமன்றத் தலைவர் தேசியக்கொடி ஏற்றினார்

புதுக்கோட்டை, ஆக.18-  மாவட்ட ஆட்சித் தலை வர் முன்னிலையில் புதுக் கோட்டை மாவட்டம் சேந்தாக் குடி ஊராட்சி மன்றத் தலை வர் வியாழனன்று தேசியக் கொடி ஏற்றினார். இது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலை யீட்டிற்கு கிடைத்த வெற்றி யாகும். நடந்துமுடிந்த சுதந்திர  தினவிழாவில் புதுக்கோ ட்டை மாவட்டத்தில் உள்ள 497 ஊராட்சிகளிலும் தேர்ந் தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களால் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரி விக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், திரு வரங்குளம் ஊராட்சி ஒன்றி யம் சேந்தாக்குடி ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசியக்கொடி ஏற்ற அனு மதி மறுக்கப்பட்டதாக ஊராட்சி மன்றத் தலைவர்  தமிழரசன் புகார் தெரிவித் திருந்தார்.

இதுகுறித்து  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் சார்பில் சேந்தாக்குடி ஊராட்சியில் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் தேசியக்கொடி ஏற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியது.  புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்த அதிகாரி களுக்கு மாவட்ட ஆட்சி யர் உத்தரவிட்டார். விசாரணை யின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரால் தேசி யக்கொடி ஏற்றிவைக்கப் படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் வியா ழனன்று சேந்தாக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஊராட்சிமன்றத் தலைவர் தமிழரசன் தேசியக்கொடி யை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இனிப்பு களை வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண் ணன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

;