tamilnadu

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

கோவில்களில் தமிழில் அர்ச்ச னைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் யாரே னும் மேல்முறையீடு செய்தால் தமிழ் நாடு அரசின் கருத்தை கேட்க  வேண்டும் என அரசு சார்பில் கேவி யட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணியை நிதியமைச்சகம்  அக்டோபர் 12 ஆம் தேதியிலிருந்து தொடங்கவுள்ளது.

தேசிய பாதுகாப்பு அகாடமியில் அடுத்த ஆண்டு முதல் பெண் கள் சேர்க்கப்படுவர் என்று ஒன்றிய அரசு பிராமணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. சேர்க்கைக்கான நுழை வுத் தேர்வு அறிவிப்பாணை அடுத்தா ண்டு மே மாதம் வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 27 ஆம் தேதி தில்லி யில் காவிரி நீர் மேலாண்மை  ஆணையக் கூட்டம் ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமையில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள் ளது. கூட்டத்தில் காவிரி ஒழுங்கா ற்றுக் குழு தலைவர் நவீன் குமார் கலந்து கொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் உதம்பூர் பகுதி யில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 விமானி கள் உயிரிழந்தனர் என்று  பாதுகாப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

எக்சிக்யூட்டிவ் -எம் பி ஏ (Execu tive MBA) எனப்படும் இரண்டா ண்டு மேலாண்மை படிப்புக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம்  19 ஆம் தேதி வரை வரவேற்கப் பட்டுள்ளதாக சென்னை ஐஐடி தெரி வித்துள்ளது.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவியை செப்டம்பர் 21 அன்று காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு சந்தித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் பறி முதல் செய்யப்பட்ட பணம், லேப்டாப் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் செவ்வாயன்று ஒப்படைக்கப்பட்டன.

நான்கு சக்கர வாகனங்களில்  பம்பர் பொருத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடி யாது; மக்கள் நலனில் அக்கறை கொண்டே தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

;