tamilnadu

img

மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் திறப்பு தஞ்சை மாவட்டத்தில் பயிர்கள், வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

தஞ்சாவூர், ஆக.7 - தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணையி லிருந்து கொள்ளிடம், காவிரி ஆறு களுக்கு உபரிநீர் திறந்து விடப் பட்டுள்ளது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் கரையே தெரியாத அளவுக்கு தண்ணீர் செல்கிறது. இதன் விளைவாக தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு  பகுதிகளில் வீடுகள், விளைநி லங்களில் வெள்ளநீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே உள்ள  அணைக்கரை கொள்ளிட கரையோர பகுதியான விநாயகன் தெரு பகுதி யில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அந்த வீடுகளில் வசித்த 48 ஆண்கள், 57 பெண்கள் 21ஆண் குழந்தைகள், 13 பெண் குழந்தைகள் என மொத்தம் 139 பேரில் தற்போது 68 பேர் அணைக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சிறப்பு முகாமில் தங்க  வைக்கப்பட்டுள்ளனர். 

மேலும் வீராக்கர் ஊராட்சி வாண்டையார் இருப்பு பகுதிகளில் கல்லணையில் காவிரிப் பிடிப்பு பகுதிகளில் அதிகமழை காரணமாக, கும்பகோணத்தை ஒட்டியுள்ள கொள்ளிடக்கரையோரப் பகுதிகளில், நீர்வளத்துறை சார்பில் மணல் மூட்டை கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கும்பகோ ணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழ கன் மற்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆகியோர் ஆய்வு செய்த னர். இச்சூழ்நிலையில் தங்களால் இங்கு வசிக்க முடியவில்லை. எனவே அணைக்கரை விநாயகன் தெரு பகுதியில் தடுப்புச் சுவர் அமைத்து தர  வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவிந்த நாட்டுச்சேரி  மக்கள் பாதிப்பு

பாபநாசம், அய்யம்பேட்டை அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், கொள்ளிடம் ஆற்றங்கரையோர பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள குறுவை நெல் பயிர்,  வளர்ச்சிப் பருவத்தில் உள்ள கரும்பு, வாழை, பருத்தி, காய்கறிப் பயிர்கள் நீரில் மூழ்கின.  கொள்ளிடக் கரையோரமுள்ள கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி பட்டுக்குடி, புத்தூர், கூடலூர், குடிகாடு உள்ளிட்ட பகுதிகள் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு மேலும் தொடர்ந்த தால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். அதேபோல கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சியில் பட்டுக்குடி, கூடலூர் கிராமங்களில் வீடுகளையும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் 500 பேருக்கு கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி நிர்வாகத்தால் உணவளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளம் பாதித்த கிராம மக்களுக்காக பட்டுக்குடியில் மருத்துவ முகாம் நடை பெற்று வருகிறது. இப்பகுதியை வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சி நிர்வாகத்தினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

;