tamilnadu

img

திருத்துறைப்பூண்டியில் மின் ஊழியர்கள் மக்கள் சந்திப்பு இயக்கம்

திருத்துறைப்பூண்டியில்  மின் ஊழியர்கள் மக்கள் சந்திப்பு இயக்கம்

திருத்துறைப்பூண்டி, மே 23-  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் முன்பு, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருவாரூர் திட்டக் குழு சார்பில் ஸ்மார்ட் மீட்டரால் ஏற்படும் விளைவுகள் குறித்து, திருத்துறைப்பூண்டி நகரத்தில் துண்டறிக்கை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. நிகழ்வில் கோட்டச் செயலாளர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி திட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன் பேசினார். திட்ட தலைவர் எஸ். சகாயராஜ், கோட்டதுணைச் செயலாளர் டி. துரைராஜ், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் தோழர்கள் கே.பி.ஜோதிபாசு, பி.என்.லெனின், யு.ராமசந்திரன், எம்.முரளி, ஏ.கே.செல்வம், எம்.பி.கே. பாண்டியன், மீன் சங்கம், என்.புவுன்ராஜ், சிஐடியு, வேணுகோபால், எஸ்.சாமிநாதன் மற்றும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருவாரூர் மின் திட்டக் கிளை, சிஐடியு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.