விரைவில் டெண்டர் முடிக்கப்பட்டு, முதல் 100 மின்சார பேருந்துகள் சென்னையிலும் 400 மின்சார பேருந்துகள் கோவை,திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கும் பயன்பாட்டிற்கு வரும் என்று கோவையில் புதனன்று புதிய பேருந்துகளை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.