tamilnadu

டிச.22ல் மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தர்ணா

திருநெல்வேலி, டிச.2- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) மாநில நிர்வாகிகள் கூட்டம் பாளையங்கோட்டையில் புதனன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் டி.ஜெய்சங்கர் தலைமை வகித்தார். சிஐடியு  மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகு மாறன் துவக்கி வைத்தார்.  மத்திய அமைப்பின் பொதுச் செயலா ளர் எஸ்.ராஜேந்திரன், ‘‘மின்சார சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் நிலை உருவானால் அன்றைய தினமே நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் நடைபெறும்’’ என பேசினார்.  கூட்டத்தில் மின்சார சட்ட திருத்த மசோதா வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மின்  நுகர்வோர்களை நேரடியாக சந்தித்து ஆபத்தை விளக்குவது, மின்வாரிய ஊழி யர்களின் தேங்கி உள்ள பிரச்சனைகள், ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல், அவுட்சோர்சிங் முறையை கை விட வேண்டும்; ஒப்பந்த தொழிலாளர் மற்றும் பகுதிநேர ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி டிசம்பர் 22 அன்று அனைத்து மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு  தர்ணா போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது,  கூட்டத்தில் பொருளாளர் வெங்கடேசன், துணைப் பொதுச் செயலாளர்கள் ரவிச்சந்தி ரன், பழனிவேல், ரவிக்குமார், பீர் முகம்மது ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

;