tamilnadu

img

உள்ளார்ந்த பேரன்பின் பேரிழப்பு - எஸ்.வி.வேணுகோபாலன்

படைப்பாளிகளின் நேய மிக்க தோழமைக் குரல்  ஜனநேசன். வாசகர்களது உற்சாக  சக பயணி அவர். அடுத்தவர் படைப்புகளை வாசிக்கவும், அவர்களோடு நெருக்கமாக உளம் திறந்து உரையாடவும் அவருக்கு வாய்த்திருந்தது. தனது படைப்பை  வாசிக்கக் கேட்டுக் கொள்ளும் போது குழந்தைமை குடியிருக்கும்  அவரது குரலில். தன்மையோடு எதிர்வினையை ஏற்றுக் கொள்ள வும் முடிந்தது அவருக்கு.   இலக்கிய உலகில் பரந்து விரிந்த கரங்களால் அன்பர்களை அரவணைத்துக் கொண்டிருந்த பெரியவர் திகசி அவர்களை விடாது சந்திப்பதும், பேசுவதும் ஜனநேசன் நிகழ்ச்சி நிரலில் முக்கியமானதாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அவரைப்  பார்த்துவிட்டு வருவதோடு நிற்காது. திகசி யார் யாரைப்  பற்றியெல்லாம் நலம் விசாரிக் கிறாரோ அவர்களையெல்லாம் அங்கிருந்தே அழைத்து அந்த  அன்பை அப்படியே கடத்துவார்.  மேலோட்டமாக இராது அந்தச்  செய்தி. இன்னின்ன எழுத்தை யெல்லாம் வாசித்தாராம், மிகவும் பாராட்டினார் என்றெல்லாம் நுட்பமாக இருக்கும்!

வாழ்க்கை அனுபவங்களைக் கதைகளாக வடிவப்படுத்தும் முயற்சியை ஆர்வத்தோடு செய்து  கொண்டிருந்தார். ரயிலில் சந்தித்த மனிதர்களோடு நடக்கும் உரையாடல், வெவ்வேறு பிராந்தி யங்களைச் சார்ந்த மனிதர்களி டையே வெளிப்படும் நட்புறவு, அடிப்படை மனிதநேயம் இவற்றைப்  படம் பிடிக்கும் கதைகள். சில போது அதீத கற்பனையாக இருக்கிறதே என்றால், அப்படி ஒரு சமூகம் உருவாகட்டுமே, படைப்பாளிக்கு அந்த ஆவல் இருப்பது தவறா என்று கேட்பார்.  பேராசிரியர் விவேகானந்தன் தனது பதிவில், ஆந்திர மாநிலத் தில் ஜனநேசன் இணையரோடு சென்ற பயணத்தினூடே வாகனம்  பழுதுபட்ட இடத்தில் மாவோ யிஸ்ட்டுகள் சூழ்ந்து நிற்கவும், தாங்கள் மாவட்ட ஆட்சியரின் பெற்றோர் என்று கேட்டறிந்து கொண்டபின்னும் அவர்கள் உள்ளன்போடு உதவியது குறித்தும்  தம்மிடம் ஜனநேசன் குறிப்பிட்ட தாகவும், அதன் பாற்பட்டே குறிப் பிட்ட சிறுகதையை எழுத நேர்ந்தது என்றும் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களைச் சார்ந்த எழுத்தா ளர்களை அணுகி அந்தந்த மாவட் டத்தின் பெயரில் சிறுகதை தொகுப்புகள் கொண்டு வந்து கொண்டிருக்கும் பொன் குமார் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்திற் கான தொகுப்பிற்கு உங்களது கதைகளில் ஒன்றை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்ட போது, என்னை காஞ்சிபுரத்தோடு யார் இணைத்து உங்களிடம் சொன்னது என்று கேட்டேன். ஜனநேசன் என்று பதில் வந்தது.  நான் சிரித்துக் கொண்டே, அய்யா  நான் காஞ்சிபுரம், வேலூர், சென்னை, கோவை என்று பல்வேறு மாவட்டங்களில் படித்தவன், வசித்தவன் என்றதும், அதனாலென்ன எல்லாவற்றிலும் ஒரு கதையை இணைப்போம், காஞ்சிபுரம் நீங்கள் மறுக்க முடியாது தானே என்று அவரும் சிரித்தார்.  கதையை அனுப்பி விட்டு, ஜனநேசன் அவர்களை அழைத்துக் கேட்டால், உங்கள் கவிதை, கட்டுரை, கதை எல்லா வற்றிலும் காஞ்சிபுரம் மேலோங்கி இருக்கும் அல்லவா, அதனால் தான் துணிந்து சொன்னது என்று  மடக்கிவிட்டார்.  முக்கிய தகவல் சொல்லியாக, இப்படி பிறர் உயர்வினிலே தனக்கு ஓர் இன்பம்  ருசித்தல் எப்பேர்ப்பட்ட அன்பின் வாழ்க்கை.

அடுத்தவர் கதைகளை வாசித் தால் குறுஞ்செய்தி போட்டுவிட்டு அடுத்த வேலைக்குப் போவதில் நிறைவு பெரும் உள்ளமல்ல அவரது.  அழைத்து நேர்பட இரண் டொரு வார்த்தைகள் சொல்லி யாக வேண்டும். அன்பு புதுப்பித் தல் அவரது கோட்பாடு.  என் மீது  பேரன்பு கொண்டிருந்தார் என்று அவரது மறைவுச் செய்தி அறிந்த பல எழுத்தாளர்கள் பதில் போடு வதைப் பார்க்கையில், தனக்கான வர் என்று எல்லோரையும் உணர வைக்கும் பேரன்பே வாழ்க்கை யின் பொருளாகக் கொண்டிருந்த வர் என்று தோன்றுகிறது.   யாருக்காவது ஏதாவது எங்கா வது தேவைப்படும் உதவியை எப்படியாவது தான் உறுதி செய்து விட முடியாதா என்று துடிப்பார்.  வேலை முடிந்துவிட்டதென்றால் அழைத்தும் சொல்லிவிடுவார்.  தம்மின் தம்மக்கள் அறிவுடைமை இனியதாகக் கொண்டாடுவார்.  மகன் வீட்டுக்குப் புறப்பட்டுப் போய்க் கொண்டிருக்கையில் ரயி லில் இருந்தவாறே அழைப்பார்.  திரும்ப ஊருக்கு வந்துவிட்டோம் என்றும் சிலபோது அழைத்துக் கூறுவார்.  குடும்பத்தினர் நலன் முழுவதும் விசாரிப்பார்.   தீக்கதிரில் அவரது மறைவுச் செய்தியை வாசித்த ஓமியோபதி மருத்துவர் - இலக்கிய வாசகர் பி.வி.வெங்கட்ராமன் மிக வும் வருத்தத்தோடு பேசினார். தொ டர்ச்சியான இடைவெளிகளில் தன்னோடு பேசிக் கொண்டிருந்த வர் ஜனநேசன், மறைந்த எழுத்தா ளர் பா.செயப்பிரகாசம் (ஜே.பி) அவர்களோடு இருந்த நெருக்கம் காரணமாகவே தன்னோடும் உரை யாடத்  தொடங்கியவர், ஜே.பியின்  நூலுக்குத் தனது அறிமுகக் கட்டுரை புத்தகம் பேசுது இதழில் வரும்போது மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டவர், எந்த எதிர்பார்ப்பும் இன்றி நலன் விசாரிக்கவும், அன்பு பாராட்டவு மான அழைப்புகள் அவரது என்று குறிப்பிட்டது முக்கியமானது. தினமணி கதிரில், கணை யாழியில், புக் டேவில், புதிய ஆசிரி யனில் அவரது கதையை எதில்  வாசித்தாலும் அவர் அழைக்கு முன் நாமாக அவரிடம் சொல்லி விட வேண்டும் என்று துடிப்பேன். அப்போது ஒலிக்கும் அவரது குரலின் தண்மை அசலானது.  அவரது மறைவு, உள்ளார்ந்த அன்புள்ளத்தின் பேரிழப்பு.