tamilnadu

img

மழையால் பயிர்கள் சேதம்... நெல்லை, விருதுநகரில் மத்தியக் குழு ஆய்வு....

விருதுநகர்/திருநெல்வேலி:
திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை மத்திய ஆய்வுக்குழு வியாழனன்று பார்வையிட்டது.

விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, வத்ராயிருப்பு, பகுதிகளில் மழை நீரில் பயிர்கள் மூழ்கி சேதமடைந்தன.சேதம், பாதிப்புகள் குறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையர் ஜெகநாதன் தலைமையிலான குழு வியாழனன்று ஆய்வு செய்தனர்.அருப்புக்கோட்டை அருகே உள்ள செங்குளம், கீழ்குடி, மறவர்பெருங்குடி உள்ளிட்ட கிராம பகுதிகளில்பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை யும் பயிர்களையும் மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர்.
வி.நாங்கூர், துலுக்கன் குளம், அள்ளிக்குளம், அலபேரி, கீழ்குடி, கல்யாண சுந்தரபுரம், பரளச்சி உள்ளிட்ட பகுதிகளில் நெல், சிறுதானிய பயிர்கள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்கள் சேதம் குறித்தும் வெங்காயம், மிளகாய், மல்லி பாதிப்பு குறித்தும் விவசாயிகள் முறையிட்டனர்.தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என மத்திய குழுவினரிடம் விவசாயிகள் கோரிக்கை எழுப்பினர்.ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் உத்தண்டராமன் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத்தில் நெல் வாழை, உளுந்து பயிர்கள் தண்ணீரில்மூழ்கின. தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கான குடிநீர் விநியோகம் செய்யும் உறைகிணறுகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. இந்த நிலையில் வியாழனன்று மழை வெள்ளச் சேதங்களை பார்வையிட மத்திய அரசின் இணைச்செய லாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் எண்ணெய் வித்து வளர்ச்சி இயக்குநர் மனோகரன், மத்திய அரசின் நிதி துறை துணை இயக்குநர் மகேஷ் குமார் ஆகியோர் வந்தனர்.திருநெல்வேலி சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் சேதமடைந்த கூட்டுக் குடிநீர் திட்டங்களை பார்வையிட்டனர். மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெள்ள சேதங்களை விளக்கினார். மின்னல் வேகத்தில் சுமார் 15 நிமிடங்கள் பார்வையிட்டு ஆலோசனை செய்த பின் உடனடியாக அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சென்றனர்.

 அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, நெல்லை மாவட்டத்தில் 6,002 ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டதாகவும் இதில் 163  ஹெக்டேர் நெல் பயிர்களும் 5839 தானியவகைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக வும் கூறினார்.மேலும் இதற்காக 6 கோடியே 16 லட்சம் ரூபாய் நிவாரண உதவி கேட்டதாகவும் குறிப்பிட்டார். நெல்லை மாவட்டத்தில்  மட்டும் 19 தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்பட்டு வருவதாகவும் இதில்  18 கூட்டு குடிநீர் திட்டம்வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த தாகவும், அவைகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்குள் சுமார் 8 கோடியே 86 லட்ச ரூபாய் செலவில் சரி செய்யப்பட்டு விட்டதாகவும்  அவர் தெரி வித்தார்.

;