tamilnadu

img

தோழர்களின் பங்களிப்பால் மீண்டெழும் சிபிஎம் நெல்லை மாவட்டக்குழு அலுவலகம்

திருநெல்வேலி, ஜூன் 15- சாதிமறுப்பு திருமணத்தை நடத்தி வைத்ததற்காக சாதி ஆதிக்கச் சக்தி யினரால்   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நெல்லை மாவட்டக்குழு அலுவல கம் தாக்கப்பட்டு, சேதமடைந்தது.  அலுவலகத்தை புதுப்பிப்பதற்காக பாளையங்கோட்டை கிளை தோழர் பச்சிராஜன் மற்றும் அவரது மகன் இந்திய மாணவர் சங்க நிர்வாகி கமல்நாத் ஆகியோர் நன்கொடையாக ரூ. 5 ஆயிரத்தை  கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் க.கனகராஜிடம் சனிக் கிழமையன்று மாலை வழங்கினர்.இதில் மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி. பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம் மற்றும் மாவட்டக்குழு உறுப்பி னர்கள் செந்தில், குழந்தைவேலு ஆகியோர் உடனிருந்தனர்.