tamilnadu

img

போராட்ட அறிவிப்பு வெற்றி பிடித்தம் செய்த கூட்டுறவு சங்க நிதியை கொடுக்க கழகங்கள் ஒப்புதல்

சென்னை, செப். 21- கூட்டுறவு கடன் சங்கத்திற்கு போக்கு வரத்து கழகங்கள் பிடித்தம் செய்யும் தொகை களை வழங்க ஒப்புக் கொண்டுள்ளன. சென்னை தேனாம்பேட்டையில் போக்கு வரத்துக் கழக பணியாளர்களின் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் 10 ஆயிரம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கூட்டுறவு கடன் சங்கம், மத்திய கூட்டுறவு  வங்கியில் இருந்து கடன் வாங்கி, உறுப்பினர்க ளுக்கு கடன் கொடுக்கிறது. கடனுக்கான தவணைத் தொகையை போக்குவரத்து கழகங்கள் தொழிலாளர்க ளின் சம்பளத்தில் பிடித்தம் செய்து கூட்டுறவு கடன் சங்கத்திற்கு மாதந்தோறும் வழங்க வேண்டும். இதனை கழகங்கள் முறையாக செய்யவில்லை. இதன்படி மாநகர் போக்குவரத்து கழகம் 57 கோடி ரூபாயும், விழுப்புரம் கோட்டம் 35 கோடி ரூபாயும் கடன் சங்கத்திற்கு நிலுவை வைத்துள்ளன. இதனால் உறுப்பினர்களுக்கு கடன் கொடுக்க முடியாமலும், மத்திய கூட்டு றவு வங்கிக்கு தவணையை செலுத்த முடியாம லும் கடன் சங்கம் நெருக்கடிக்கு உள்ளானது.

இந்நிலையில், நிலுவைத் தொகை, பிடித்தம் செய்யப்படும் தொகையை மாதா மாதம் கடன் சங்கத்திற்கு வழங்கக் கோரி செவ்வாயன்று (செப்.21) பல்லவன் இல்லம் முன்பு போராட்டம் நடத்த அரசாங்க போக்கு வரத்து ஊழியர் சங்கம் அறைகூவல் விடுத்தது. இதனையடுத்து மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் அன்பு ஆபிர காம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழி யர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறு முகநயினார், கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஏ.துரை உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில், மாநகர் போக்குவரத்து கழகம் மாதாமாதம் பிடித்தம் செய்யும் தொகையை முறையாக வழங்கவும்,  நிலுவைத் தொகையை  57 கோடி ரூபாயை 12 தவணைகளாக வழங்க வும் மேலான் இயக்குநர் ஒப்புக் கொண்டதாக சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பல்லவன் இல்லம் முன்பு நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் ஏ.துரை, பொதுச் செய லாளர் வி.தயானந்தம், பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி உள்ளிட்டோர் பேசினர்.

விழுப்புரம்

விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், கடலூர்,  திருவண்ணாமலை போக்குவரத்து கழகங்கள்  சார்பில் விழுப்புரம் கோட்ட அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சம்மேளன துணைத்தலைவர் ஏ.பி.அன்பழகன், கூட்டுறவு  கடன் சங்க துணைத்தலைவர் கண்ணன் மற்றும் இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து மேலாண்மை இயக்குநர் தயாஸ் சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசினார். இதில், மாதாமாதம் பிடித்தம் செய்யும் தொகையை முறையாக வழங்கவும், 35 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை 12 தவணைகளில் வழங்கவும் மேலாண்மை இயக்குநர் ஒப்புக் கொண்டதாக சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.

;