tamilnadu

img

ஆசிரியர் இயக்க முன்னோடி தோழர் கே.ஏ.தேவராஜன் காலமானார்

சிறந்த மார்க்சிய சிந்தனையாளர்

சிபிஎம் மாநில செயற்குழு புகழஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னோடிகளில் ஒருவரும், நீண்ட கால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினருமான தோழர் கே.ஏ. தேவராஜன் (வயது 82) அவர்கள் உடல்நலக் குறைவால் செவ்வாயன்று (09.08.2022) உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த கவலையும், வேதனையும் அடைந்தோம். அவரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருப்பரங்குன்றம் வட்டச் செய லாளராக  தனது இயக்கப் பணியைத் துவக்கிய அவர், மதுரை, தேனி மாவட்டங்க ளில் ஆசிரியர்களை திரட்டி இயக்கத்தை கட்டியவர்.

ஆசிரியர்களுக்கு “ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம்” என்ற கோரிக்கையை முன்னெடுத்து 1.6.1998 முதல் அந்த ஊதியம் தமிழ்நாட்டில் நடை முறையாக்க பாடுபட்டவர். 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணி உருவான போது அதில் தன்னை இணைத்துக் கொண்டு மதுரை மாவட்டச் செயலாளர், மாநில தலைவர், அகில இந்திய பொருளாளர் என பல பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர்.  ஆசிரியர்களின் நலன்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தனது வாழ்நாள் முழுவதும் அயராது போராடியவர். சிறந்த  மார்க்சிய சிந்தனையாளர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட கால உறுப்பி னர். பல தோழர்களை அடையாளங்கண்டு கட்சிக்குள் ஈர்த்தவர். இவரது மகள் தோழர் டி.தியாகதேவி அவர்கள் மதுரை தீக்கதிர் அலுவலகத்தில் நீண்ட காலமாக பணியாற்றி யவர். தோழர் கே.ஏ. தேவராஜன் மறைவு அகில இந்திய அளவில் ஆசிரியர் இயக் கத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது துணைவியாருக்கும் ஐந்து மகள் களுக்கும், தோழர்களுக்கும் கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

டி.கே.ரங்கராஜன் புகழஞ்சலி 

தோழர் கே.ஏ.தேவராஜன் அவர்கள், ஆசிரியர் இயக்கத்தில் பணியாற்றிய அர்ப்பணிப்புமிக்க, மகத்தான கம்யூ னிஸ்ட் தலைவர் என்று கட்சியின் மூத்த தலைவர் டி.கே .ரங்கராஜன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். கட்சியின் மத்திய கட்டுப் பாட்டு குழு தலைவர் ஏ.கே.பத்மநாபன் உள் ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மதுரை, ஆக.9- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும் மார்க்சிய சிந்தனையாளருமான தோழர். கே.ஏ.தேவராஜன் மதுரையில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் காலமானார். உடல்நலக் குறைவால் மதுரை யில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு வயது 88. கே.ஏ.தேவராஜன் மதுரை செல்லூர் அகிம்சாபுரத்தில் 22.9.1934-ஆம் ஆண்டு பிறந்தார். ஆரம்ப  காலம் முதல் இடதுசாரி கருத்துக் களால் ஈர்க்கப்பட்ட அவர் இயக்கம் தொடர்பான நூல்களை தொடர்ந்து  வாசித்து வந்தார்.  பின்னர் ஆசிரியர்  பணி கிடைத்ததைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் மூலனூரில் இருந்த ஓராசிரியர் பள்ளியில் தமது பணி யைத் தொடங்கினார். பணியில் சேர்ந்த காலம் முதல் ஆசிரியர்களை ஒன்றிணைத்து சங்கம் அமைத்து  அவர்களின் உரிமைகளுக்காகவும் கோரிக்கைகளுக்காகவும் போராடி னார்.

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்ற அமைப்பை உரு வாக்கிய ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவர் கே.ஏ.தேவராஜன். பணிக் காலத்தில் பல்வேறு இடங்களுக்கு மாறுதலாகிச் சென்றாலும் சென்ற இடங்களில் எல்லாம். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியை பலப் படுத்தினார். தமிழகம் அறிந்த ஆசிரி யர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். ஆசிரியர்களுக்காக மட்டுமல்லாது அரசு ஊழியர்கள் தொடங்கி அடித் தட்டு விவசாயிகள், தொழிலாளர் களுக்காகவும் குரல் கொடுத்தவர் கே.ஏ.தேவராஜன். வறுமையால் வாடிய குடும்பங்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழல் இருந்தபோது அவர்களது வீடுகளுக்கே சென்று குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தவர். அரசுப்பள்ளியே சிறந்தது.  அரசுப் பள்ளிகள் தான் சிறந்த கல்வியை வழங்கும் என்பதை உரக்க ஒலித்த அவர், பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் அரசுக் கல்லூரிகளில் சென்று சேருங்கள் என உற்சாகப்படுத்தியவர். படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை வழங்குவது அரசின் கடமை என  மேடைகளில் முழங்கியவர் கே.ஏ. தேவராஜன். மறைந்த கே.ஏ.தேவராஜனுக்கு சிவகுருராணி என்ற மனைவியும், தே.பாரதி, தே.ரத்னவாசுகி, தே. தியாகதேவி, தே.சேவாப்ரியா, தே. நவீன்ஜோதி என்ற ஐந்து மகள்கள் உள்ளனர். அவரது மகள் தே.தியாக தேவி மதுரை தீக்கதிர் அலுவல கத்தில் விநியோக மேலாளராக பணி யாற்றியவர்.

தலைவர்கள் அஞ்சலி

தோழர் கே.ஏ.தேவராஜன் மறை வுச் செய்தியறிந்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர்,  தீக்கதிர் முன்னாள் ஆசிரி யர் வி.பரமேசுவரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வர் சி.ராமகிருஷ்ணன், மதுரை மாந கர் மாவட்டச் செயலாளர் மா.கணே சன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன்,  செம்மலர் துணையாசிரியர்கள் தி. வரதராசன், ஸ்ரீரசா, தீக்கதிர் பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், செய்தியாசிரியர் ப.முருகன், பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன், மேலாளர்கள் ஆர்.உமாபதி, கெ.பாண்டியராஜன் மற்றும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள், தலை வர்கள், பள்ளி-கல்லூரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பல்வேறு கல்லூரி களைச் சேர்ந்த பேராசிரியர்கள், மூட்டா நிர்வாகிகள் பல்வேறு வர்க்க-வெகுஜன அரங்கங்களின் நிர்வாகிகள் அன்னாரது இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை, மதுரை தீக்கதிர் அலுவலகம் எதிரே உள்ள சிஏஎஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

 

 

 

;