tamilnadu

img

மதுரையில் மூத்த தோழர்களுக்கு பாராட்டு விழா.....

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் அரசியல், கலை இலக்கியத் துறையில் தடம் பதித்த மூத்த தோழர்கள் என்.ராமகிருஷ்ணன், எஸ்.ஏ.பெருமாள், என்.நன்மாறன், அருணன் ஆகியோருக்கு பாராட்டுவிழா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக்குழு சார்பில் வெள்ளியன்று நடைபெற்றது. விழாவில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் உரையாற்றினார். கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், சு.வெங்கடேசன் எம்.பி., எஸ்.கே.பொன்னுத்தாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;