tamilnadu

நவ.10 இல் முதல்வர்  புதுக்கோட்டை வருகை

நவ.10 இல் முதல்வர்  புதுக்கோட்டை வருகை

புதுக்கோட்டை, அக். 26-  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நவம்பர் 10 ஆம் தேதி (திங்கள்கிழமை) புதுக்கோட்டை வருகிறார். கீரனூர் அருகேயுள்ள களமாவூர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரி வளாகத் திடலில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, நலத் திட்ட உதவிகளை வழங்கி, மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் அவர் பேசுகிறார். இதற்காக, மூகாம்பிகை கல்லூரி வளாகத்தை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மு. அருணா, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே. செல்லப்பாண்டியன் ஆகியோர் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டனர். பொதுமக்கள் உள்ளே வந்து செல்வதற்கான தாராளமான வழிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மழைக் காலமாக இருப்பதால் தரமான பந்தல், தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கான ஏற்பாடுகள், பொதுமக்களுக்கான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்வது குறித்தும் திட்டமிடப்பட்டது.